உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11,698 பேர் மீதான வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

11,698 பேர் மீதான வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டங்ஸ்டன் போராட்டம் தொடர்பாக 11,698 பேர் மீது போடப்பட்ட நான்கு குற்ற வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன் அறிக்கை:மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, மத்திய அரசு உரிமை வழங்கியதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனப் பிரதமரை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என, ஒரு மனதாக தமிழக சட்டசபையில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழக அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட 11,698 பேர் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் மேலுார் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சங்கீதா சட்டம் 2023ன் கீழ், மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட, நான்கு குற்ற வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Madras Madra
ஜன 27, 2025 11:08

அண்ணாமலை இந்த விஷயத்தில் பேர் தட்டிக்கொண்டு போயிட்டார் அதனால இப்படி செஞ்சா கொஞ்சம் நல்ல பேர் வாங்கலாம்னு இப்டி எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தா சரி அண்ணாமலையால


Barakat Ali
ஜன 27, 2025 08:34

நீங்க போராட்டக்காரர்கள் மேல போட்ட வழக்கை ரத்து பண்ணலைன்னாலும், அவங்க நீங்க கொடுக்குற பணம், பிரியாணி, சரக்குக்கு கட்டுப்பட்டு தேர்தல்ல குத்து குத்து ன்னு குத்திருவாங்க ..... அதான் மரத் தமிழனின் சிறப்பு .....


Pandiarajan Thangaraj
ஜன 27, 2025 08:33

இவங்களே வழக்கு போடுவார்கள். பிறகு இவங்களே அதை ரத்து செய்வார்கள். சூப்பர்


கோமாளி
ஜன 27, 2025 06:34

11,968 பேர் மேல் வழக்கு போட்டதற்காக இந்த அரசு வெட்கி தலை குனிய வேண்டும்


Kasimani Baskaran
ஜன 27, 2025 06:32

ஆட்சியில் இருக்கு பொழுதும், ஆட்சியில் இல்லாதபோது தீம்கா இரண்டு வகையான முகத்தை காட்டும். அந்த இரண்டும் மாநிலத்துக்கும், நாட்டுக்கும், பொதுமக்களுக்கும் உகந்ததாகவே இருக்காது.


Muthu Kumaran
ஜன 27, 2025 06:28

அப்ப எதுக்கு பாராட்டு விழா, ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும்


தாமரை மலர்கிறது
ஜன 27, 2025 02:58

இந்த வழக்கை ரத்து செய்வது பயங்கரவாதிகளுக்கு கொம்புசீவிவிடுவதை போன்ற ஆபத்தான செயல். தொழிற்புரட்சியை நசுக்கும் செயல். சீனாவுக்கு துதிபாடும் கம்யூனிஸ்ட்கள்க்கு இனிப்பு கொடுத்தது போன்ற செயல். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு எதிரான செயல்.


புதிய வீடியோ