உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளிக்கு மறுநாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் 20 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்லத் துவங்கியுள்ளனர். மறுநாளும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தாண்டு அக்.,20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்.,21 அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்.,25 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bhaskaran
அக் 18, 2025 16:35

அரசு பள்ளிகளில் பாடம் மெதுவாக சொல்லி கொடுப்பாங்க பண்டிகை , மழை நாள் விடுமுறை என்று பின்தங்கி இருக்காங்க தனியார் பள்ளிகளில் அரைப் பரிட்சை தேர்வுக்கு முன்பே பாடங்களை முடித்து ரிவிஷன் தேர்வு நடத்துவாங்க அரசுகிராம பள்ளி வாத்தியாரு வட்டி தொழில் செய்து சம்பாதிக்கிறாங்க .


Kalidass SR
அக் 18, 2025 09:15

அரசு ஊழியர்கள் பரிதவிப்பு...


அப்பாவி
அக் 18, 2025 08:59

ஐயய்யோ... ஒரு நாள் மாமூல், லஞ்சன், ஆட்டை வருவாய் இழப்பாச்சே...


நிக்கோல்தாம்சன்
அக் 18, 2025 07:41

ஆனாலும் மதசார்பற்ற ஸ்டாலின் தீபாவளிக்கு மாத்திரம் வாழ்த்து சொல்லமாட்டாரு , வோட்டு பயம் இருக்கட்டும்


Kasimani Baskaran
அக் 18, 2025 05:26

தேவையற்ற விடுமுறை... டாஸ்மாக்குக்கு விடுமுறை கிடையாது.


உ.பி
அக் 17, 2025 22:33

சமூக நீதி எங்கே? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் ஏன் பாகுபாடு? மாடல் அரசும் எங்களை கைவிட்டது.


Modisha
அக் 17, 2025 22:26

அன்னிக்கி ஏதாவது பண்டிகை வருதா ?


முக்கிய வீடியோ