மேலும் செய்திகள்
'கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது'
09-Apr-2025
சென்னை:தஞ்சை தமிழ் பல்கலை, அம்பேத்கர் சட்டப் பல்கலை துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.தமிழக பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிப்பதில், தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால், தமிழக அரசு அமைத்த துணை வேந்தர் தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிக்காமல், பல்கலை மானியக்குழு பிரதிநிதியை சேர்த்து, கவர்னர் புதிய பட்டியல் அனுப்பினார்.இந்நிலையில், தமிழக அரசு அனுப்பிய, 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது குறித்த வழக்கில், அனைத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.இதைத்தொடர்ந்து, தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கான துணைவேந்தர்களை நியமிப்பது குறித்த தேடுதல் குழு அமைத்துள்ள தகவலை, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.அதில், அம்பேத்கர் சட்டப் பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மூன்று பேரும், தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், நீதிபதி வாசுகி தலைமையில், ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர்.
09-Apr-2025