உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அநீதி

துாய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அநீதி

எல்லா தொழிற்சாலைகளிலும், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். நிரந்தர தொழிலாளர்களே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, எந்த பணி பாதுகாப்பும் இல்லை. பலர் உயிர் தியாகம் செய்து போராடி பெற்ற, எட்டு மணி நேர வேலை என்பது பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் துாய்மை பணியாளர்கள், தங்கள் உரிமைக்காக, கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அவர்களுக்கு தொடர்ந்து அநீதி அளித்து வருகிறது. இவர்களை போலவே சத்துணவு, அங்கன்வாடி, மக்களை தேடி மருத்துவம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள், தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிலாளர் நல சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் சீர்குலைத்து வருகின்றன. எனவே, தொழிற் சங்கங்கள் வலுவாக போராட வேண்டும். - சவுந்தரராஜன் மாநில தலைவர், சி.ஐ.டி.யு.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ