உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது'' என்று மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழக பா.ஜ.,தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவை வருகை தந்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கூட்டணியை பற்றியும், எத்தனை சீட் என்பதை பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். அது குறித்து பேஸ்புக், ட்விட்டரில் பதிவு போட வேண்டாம். அது பற்றி பேச வேண்டியது அகில இந்திய தலைமை. அவர்கள் முடிவு செய்வர்.பேஸ் புக், டிவிட்டரில் போட்டாலும் எப்படியாவது கைது செய்ய வேண்டும், போனில் பேசினாலும் ஒட்டு கேட்க தயாராகி வருகின்றனர். தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்பதை தி.மு.க, அரசு கண்காணிக்கிறது. பா.ஜ., தொண்டர்கள் எல்லோரும் போனில் கொஞ்சம் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. இரட்டை இலையோடு, அதிக அளவில் எம்.எல்.ஏ.,க்கள் வரும் தேர்தலில் வெற்றி பெறுவர். 2026 ல், அவுட் ஆப் கன்ட்ரோலில் தான் தி.மு.க., இருக்கும். ஹரியானாவுக்கும், டில்லிக்கும், மத்திய பிரதேசத்துக்கும், உ.பி.,க்கும் அமித்ஷா சென்றார். அங்கு எல்லாம் பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்தார். தமிழகத்துக்கு வந்துள்ளார்; இங்கும் பா.ஜ., ஆட்சியை கொண்டு வருவார்.பா.ஜ.,வை வலுப்படுத்தியதில், முன்னாள் தலைவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அ.தி.மு.க., தலைவர்களோடு, தொண்டர்களோடு பயணிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் கட்சியாக வர வேண்டும். நம் சனாதன தர்மத்தையும், வேதமந்திரங்களையும் பாதுகாக்க வேண்டும். இன்னுமொரு முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நம்மை நாமே பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, நயினார் நாகேந்திரன் பேசினார்.முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அவரை சாரட் வண்டியில் 1 கி.மீ.,துாரம் வரை, மேளதாளம், ஆடல்களுடன் அழைத்து வந்து வரவேற்றனர். நிகழ்ச்சியில், பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், பொது செயலாளர் முருகானந்தம், மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ.,க்கள் வானதி, சரஸ்வதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Rajathi Rajan
ஏப் 20, 2025 19:32

போன் பேச்சு ஒட்டு கேட்பது தமிழக அரசு இல்லை நைனார் அவர்களே, உங்க கட்சின் முன்னாள் தலைவரின் வேலை தான் இது.


venugopal s
ஏப் 20, 2025 16:45

எல்லாம் உங்கள் மத்திய பாஜக அரசு கற்றுக் கொடுத்தது தான்!


Palanisamy T
ஏப் 20, 2025 14:49

மாண்புமிகு நயினார் அவர்களே, ஒட்டுக் கேட்கும் கலாச்சாரம் -கலாச்சாரமென்றுச் சொன்னாலும் கடைமையென்றாலும் - எல்லாம் ஒன்றுதான், ஒன்றிய அரசிடம் இல்லையென்று உறுதியாகச் சொல்லமுடியுமா?


Svs Yaadum oore
ஏப் 20, 2025 16:27

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழன் படுகொலை .....காங்கிரஸ் ஒன்றிய அரசு அப்போது எதை ஒட்டு கேட்டு என்ன நடவடிக்கை எடுத்தது?? ....இவனுங்கதான் தமிழன் வளர்த்தானுங்க ....தமிழ் தமிழன் தமிழன்டா ....


Svs Yaadum oore
ஏப் 20, 2025 16:37

திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி ....15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த கேடு கெட்ட மாடல் ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.....இதை விடியல் ஒட்டு கேட்டுதா ??.....


VSMani
ஏப் 20, 2025 13:23

சில வருடங்களுக்கு முன்பு இவரது மகன் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்தார் என்றும் பல கோடி ரூபாய் பணம் கணக்கில் காட்டாத பணம் இவருடைய ஆட்களிடமிருந்து பிடிபட்டதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. எல்லாம் இப்போது நம்மக்கள் மறந்து விட்டார்கள். இதுதான் அரசியல்.


தஞ்சை மன்னர்
ஏப் 20, 2025 12:34

ஹி ஹி அதுக்கு பேர் போனதே உங்க கட்சிதானே அதெப்படி கட்சியில் ஒருத்தர் பொய் சொல்லலாம் வர்ரது எல்லாம் பொய் பொழப்பு நடத்தினால் எப்படி


அப்பாவி
ஏப் 20, 2025 12:05

உக்ளடி வேலை நடக்குதான்னு கண்காணிக்க உங்க போனை ஒன்றிய ஆளுங்கதான் ஒட்டு கேக்கறாங்க.


Palanisamy T
ஏப் 20, 2025 12:01

ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் ஆள போவது அதிமுகயில்லை. திரையின் பின்னால் மறைவாக நின்று ஆட்டுவிப்பது அவர்கள்தான். திமுக தெரிந்த பேய். அவர்கள் தெரியாத பேய்கள். Now you can make your choice


Svs Yaadum oore
ஏப் 20, 2025 13:18

விடியலின் பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் மதம் மாற்றிகள் தெரிந்த பேய? எடப்பாடி ஆட்சியில் நான்கு ஆண்டுகள் மக்கள் எவ்வளவோ நிம்மதியாக இருந்தார்கள். இது மக்கள் சொல்வதுதான் ...தமிழ் தமிழன் தமிழன்டா ..


Oviya Vijay
ஏப் 20, 2025 11:25

தமிழகத்தில் தாமரை ...


Palanisamy T
ஏப் 20, 2025 14:41

தமிழகத்தில் தாமரை என்றோ மலர்ந்து விட்டது. நீங்கள் சொல்லும் பாஜக தாமரை நேற்று வந்த தாமரை. வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் என்று அன்றே கல்விச் செல்வமான சரஸ்வதி தெய்வத்தை நாம் போற்றி பாடியுள்ளோம். சரஸ்வதி தெய்வமும் அமர்ந்திருப்பது தாமரை மலரில்


Oviya Vijay
ஏப் 20, 2025 11:06

நீங்க சொல்றத நானும் வழிமொழிகிறேன்... போதுமா?


Kasimani Baskaran
ஏப் 20, 2025 10:46

மாநில உளவுத்துறை இல்லாத உரிமைகளை எடுத்துக்கொண்டு ஒட்டுக் கேட்பது அக்கிரமம். பங்காளிகளை ஒட்டுக்கேட்பதால் ஒரு பயனும் இல்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை