உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பத்திர தணிக்கையில் தனியாரை பயன்படுத்த தமிழக அரசு திட்டம்

 பத்திர தணிக்கையில் தனியாரை பயன்படுத்த தமிழக அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில், 589 சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த பத்திரங்களில் மதிப்பு, வகைப்பாடு விபரங்கள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இதில் குறைந்த மதிப்புக்கு பத்திரங்களை பதிவு செய்து கொடுப்பது போன்ற முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க, பதிவு மாவட்ட அளவில் தணிக்கை பணிகளுக்காக, ஒரு மாவட்ட பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பதிவுத்துறை வழிகாட்டுதல்கள் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் தணிக்கை செய்கின்றனர். இதில் காணப்படும் குறைபாடுகளை தடுக்க, 'ஆன்லைன்' வசதி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், பல இடங்களில் தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்கள் ரகசிய கூட்டணி அமைத்து, வருவாய் இழப்புகளை மறைப்பதாக புகார் எழுந்தது. இதனால், பத்திரப்பதிவு துறையின் வருவாய் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தணிக்கை பணியை இதே துறையில் இருப்பவர்கள் மேற்கொள்வதால், இழப்புகள் மறைக்கப்படுவதாக உயரதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, இதற்கு மாற்று வழியாக இந்த பணியில் தனியாரை பயன்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை