உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் அரசின் சாதனைகளை வெளிப்படுத்திய பொருளாதார ஆய்வறிக்கை: தமிழக அரசு பாராட்டு

ஸ்டாலின் அரசின் சாதனைகளை வெளிப்படுத்திய பொருளாதார ஆய்வறிக்கை: தமிழக அரசு பாராட்டு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வெளிப்படுத்தி உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பான தமிழக அரசு அறிக்கை:பார்லிமென்டில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2024 - -25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், காலணிகள் உற்பத்தி தொழில் வளர்ச்சி, இல்லம் தேடிக் கல்வி திட்டம் போன்றவற்றில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது.இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில், 38 சதவீதம்; மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில், 47 சதவீதம் பங்களிப்பை தமிழகம் வழங்கியுள்ளது. தோல் பொருட்கள் உற்பத்தி துறையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலக அளவில் புகழ் வாய்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான, 'நைக்', தைவான் நாட்டு, 'பெங்தே' நிறுவனத்துடன், தமிழகத்தில் தோல் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த 2022ல், காலணி மற்றும் தோல் பொருட்களுக்கு என்று, தனியே ஒரு கொள்கையை, தமிழகம் உருவாக்கியுள்ளது. இது, பெரிய உற்பத்தியாளர்கள், சிறிய நிறுவனங்களை ஆதரிக்கும் ஒரு விரிவான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருப்பதையும் ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது. தமிழகத்தில், முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத்தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள், நில விலை மானியங்கள் போன்றவற்றை, தமிழகம் அரசு சிறப்பாக வழங்கி வருகிறது என்றும், ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.இல்லம் தேடி கல்வித் திட்டத்தை, ஒரு புதுமையான முயற்சியாக ஆய்வறிக்கை விவரித்துள்ளது. கல்வி முறை, மாணவர்களின் சுவாரஸ்யமான செயலாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைப்பதற்காக, இத்திட்டம் துவங்கப்பட்டது.கூடுதலாக, ஆசிரியர்களின் விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறையால், குழந்தைகளின் கற்றல் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்பறைகளில் பங்கேற்பதாகவும், கணிதம், மொழித் திறன்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும், பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.மொத்தத்தில், மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி போன்றவை குறித்து கூறியுள்ள விபரங்கள், முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Barakat Ali
பிப் 02, 2025 14:47

கவர்னர் உரையை படிக்காம போனா என்ன? எங்களுக்கு நாங்களே முதுகுல ஷொட்டு கொடுத்துக்குவோம் ..... இதுதான் திராவிட மாடல் ......


ஆரூர் ரங்
பிப் 02, 2025 11:52

பெரும்பாலான ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்புப் பாடத்தை படிக்கத் தெரியாது. இந்த தமிழக சாதனையை அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


ஆரூர் ரங்
பிப் 02, 2025 11:41

தங்களது நாடுகளில் சாயப்பட்டறைகள், தோல் பதனிடுவதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மேலை நாடுகள் அந்த தொழிலை நம் தலைல கட்டி இறக்குமதி செய்து கொள்கிறார்கள். பாலாறு, நொய்யல் ஆறுகள் சீரழிய தோல், சாய ஆலைகள் அதிகரிப்பே காரணமாகி விட்டது. மாசுபட்ட நிலத்தடி நீர் விவசாயத்தை பாதித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இவற்றின் ஏற்றுமதியின் மூலம் கிட்டும் அன்னியச் செலாவணியை அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்யவே செலவழிக்கிறார்கள். அடுத்த தலைமுறை தமிழகம் தோல், சுவாச நோய்களுடன் போராட்ட வாழ்க்கைதான் நடத்தும்.


Dharmavaan
பிப் 02, 2025 08:15

இதெல்லாம் மையா புருடாவா மக்கள் கருத்தை கேட்க வேண்டும் மத்திய அரசின் அதிகாரிகளில் நிறைய கருப்பு ஆடுகள் லஞ்சம் வாங்கியோ மோடி எதிர்ப்போ இவனுக்கு சாமரம் வீசுகின்றன. தோல் தொழில் எத்தனையோ ஆண்டுகளாக நடக்கிறது இதில் இவன் செய்தது ஒன்றுமில்லை எவனோ செய்ததன் பலனை இவன் பெருமை தேடுகிறான் இவ்வளவு பெருமை உள்ளவனை ஏன் பொருளாதாரத்தை உயர்த்தவில்லை.அற்பம்


பாமரன்
பிப் 02, 2025 08:47

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் மொமென்ட்...


அப்பாவி
பிப் 02, 2025 07:49

அங்கே அவிங்க டெல்லி லெவல்ல பெருமிதம்னா இவுரு இங்கே சென்னை லெவல்ல பீத்தல்.


Kasimani Baskaran
பிப் 02, 2025 07:29

ஒரே ஒரு அந்நிய செருப்பு தயாரிக்கும் நிறுவனத்தால் பொருளாதாரம் மேம்பாட்டு இருக்கிறது என்பது மகா மட்டமான வாதம்.


பாமரன்
பிப் 02, 2025 08:48

இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்கு கிட்டத்தட்ட நாற்பது சதவீதம்... வயிற்றெரிச்சல் தான் பட முடியும் காசி... சோ சேட்...


Kasimani Baskaran
பிப் 02, 2025 13:52

ஆனால்... மொத்த ஆவின் கொடுக்கும் லாபம் டாஸ்மாக் ஒரு கடை லாபத்தை விட குறைவு.. மின்சார வாரியம் கூட உலகின் அதிக நஷ்டத்தில் ஓடும் ஒரு அமைப்பு...


சிட்டுக்குருவி
பிப் 02, 2025 07:14

மத்திய ஆய்வறிக்கை என்று தமிழக அரசு அறிக்கை விடுகின்றது. மத்திய ஆய்வறிக்கையை அப்படியே பதிவிறக்கம் செய்திருந்தால் /அல்லது பிரசிரிக்கபட்டிருந்தால் மக்களுக்கு புரியும். கல்வியில் மாணவர் இடை நிறுத்தம் அதிகமாவதாகவும் செய்திகள். மாணவரிடையே போதை உபயோகம் அதிகமாவதாகவும் செய்தி. ஒரு மாநிலத்தில் தொழில்சாலைகள் பெருகினால் மட்டும் போதுமா. இன்னும் மக்கள் மழை பொழ்தால் ஒழுகும் கூரையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது என்னவிதமான வளர்ச்சி? கட்சிக்கு 30 ஆண்டுகள் வீதம் ஆட்சி செய்தும் கடைநிலையில் உள்ளவர்கள் அங்கேயே தான் உள்ளார்கள். தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சி அரசியல் வாதிகளின் சொத்துசேர்பதில் தான் அதீதமாக உள்ளது.பாராளு மன்றதிர்க்கு அதிகாரமிருக்குமானால் அரசியல் வாதிகளின் கடந்த 40 வருடங்களாக சேர்த்த சொத்துகளுக்கு ஒரு ஆட்டிட்டுக்கு உட்படுத்த சட்டம் இயற்றவேண்டும்.


Suresh Kesavan
பிப் 02, 2025 06:46

தன்னை தானே பாராட்டி பெருமை பீற்றிக்கொள்வதும்கூட இவர்களின் பெரிய சாதனை தான். வெட்கமில்லை..


ramani
பிப் 02, 2025 06:38

ஆழ்ந்து சிந்தித்தால் ஊராட்சி ஒன்றிய அரசை பழித்திருப்பது தெரியும். என்னமோ உங்களை பாராட்டி விட்ட மாதிரி பில்டப் தருவது சிரிப்பாய் இருக்கிறது. எந்த விதத்திலும் ஊராட்சி ஒன்றிய அரசு மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்களா என்று பூத கண்ணாடி வைத்து பார்க்க வேண்டும்


இறைவி
பிப் 02, 2025 04:57

மத்திய பட்ஜெட் சொன்னதையும் மீறி இங்கு வடமாவட்ட பாலாற்றுப்படுகை முழுவதும் தோல் கழிவு நீரினால் மாசடைந்திருப்பதையும் தமிழ் நாடு தன் வெற்றியாக அறிவிக்கலாமே.


Barakat Ali
பிப் 02, 2025 14:50

தலைகுனியவேண்டிய விஷயங்களை மறைப்போம்.... மற்றவர்கள் பெருமைக்கு உரிமை கொண்டாடுவோம் ..... அதுதான் திராவிட மாடல் ........