உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‛‛அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு'' என சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மழை போல் முதலீடு

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் நான் கோட், சூட் அணிவது வழக்கம். அனைத்து வெளிநாட்டினரும் இங்கு வந்துள்ளதால், கோட், சூட் அணிந்தது எனக்கு பொருத்தமானதாக உள்ளது. இன்று சென்னையில் மழை பெய்தது. அதேபோல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். முதல்வராக மட்டுமின்று சகோதரனாக உங்களை வரவேற்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1k2dx5oo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பியூஷ் கோயலுக்கு நன்றி

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என தமிழில் பழமொழி உள்ளது. பழங்காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள். திருவள்ளுவர், கனியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணிற்கு முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். மாநாட்டிற்கு வந்து பெருமை சேர்த்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.எங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி. தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். பல சாதனைகளை மிஞ்சக்கூடிய மாநாடாக இது இருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன.

அதிவிரைவுப்பாதையில்..

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தனித்த தொழில்வளம் கொண்டது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம் ஆகவும் தமிழகம் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் தமிழகம் பயணித்து வருகிறது. முதலீட்டாளர் மாநாடு மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன். இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 2030க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

குவியும் முதலீடு

ஆட்சி மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் ஏராளமான முதலீடுகள் தமிழகத்தில் குவிகிறது. முதலீட்டாளர்களின் விருப்பத்தை முன்கூட்டியே கணித்து தமிழக அரசு செயல்படுகிறது. திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கியதுடன், நாளைய தொழில் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம். தொழிற்சாலைகளுக்கு ஏற்ற தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர். இளைஞர்களின் திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதிலும் உறுதியாக உள்ளது. 2.5 ஆண்டு கால ஆட்சியில் பெருமளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட புரிந்தணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தனிக்கொள்கை

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு கொள்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஜவுளி மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கைகள் வகுக்கப்பட்டு உள்ளன. பின்தங்கிய மாவட்டங்களில் வேலைவாயப்பு உருவாக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதனால், அந்த மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு.

தொழில் துவங்க சிறந்த சூழல்

தமிழகத்தில் ஏற்கனவே தொழில்திட்டங்களை அமைத்து நிறுவனங்கள், தங்களது திட்டங்களை விரிவுபடுத்தியது, தொழில் துவங்க சிறந்த சூழல் நிலவுவதற்கு சான்று. தமிழகத்தை சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். எல்லா துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை மாநிலம் கொண்டு உள்ளது. மாநாடு நடக்கும் 2 நாட்களில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. தொழில் துவங்க அனைத்து உதவிகளையும் செய்வோம்.வாருங்கள். முதலீடு செய்யுங்கள். தமிழகத்தின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் பங்கெடுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.Gallery

முதன்மை மாநிலம்

முன்னதாக இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம். ஆட்டோமொபைல், மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகம், பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக மட்டும் அல்லாமல், இந்திய தொழில்துறை வளர்ச்சியிலும் முன்னிலையில் உள்ளது. உற்பத்தியில் முதன்மை மாநிலமான தமிழகத்தில் 45 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. இந்திய அளவில் 70 சதவீத நான்கு சக்கர வாகனங்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு ராஜா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஜன 08, 2024 07:12

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு... இப்படி மேடைகளில் பேசிவிட்டு, ஒரே குடும்பத்தை வளர்ப்பது எப்படி நியாயம் ஆகும்?


அப்புசாமி
ஜன 07, 2024 19:44

ஆட்டையும்,ஊழல் பரவலாகியுள்ளது என்பதே உண்மை.எல்லா லெவலிலேயும் ஓப்பனா கேட்டு வாங்கிக்கறாங்க. வேலை நடக்க அரசு கட்டணமா 7500 செலவானால், இவிங்களுக்கு 4000 குடுத்தால் கணக்கில் வராது. வேலையும் கச்சிதமா நடந்துரும். தத்தி தமிழ் மக்களும் லஞ்சம் குடுத்துட்டு 3500 சேமிக்கிறாங்க.


Bala
ஜன 07, 2024 17:19

துபாய் குடும்ப சுற்றுலா ரூ 6000 கோடி வந்தா? LuLu slowlu ஆயிடிச்சா? லூலூ மால், ரிலையன்ஸ் ரீடெய்ல் இதெல்லாம் சிறு வியாபாரிகளை பாதிக்காதா? முனபு கூவிய திமுகவினர், விசிகவினர், கம்யூனிஸ்டுகள் ஏன் இப்பொழுது மவுனம் / தலைமறவு? கருப்பு துண்டு புலி ஏன் பம்முகிறார்? வெட்கமாயில்லை? இதெல்லாம் ஒரு பிழைப்பா??


vbs manian
ஜன 07, 2024 15:54

இங்கு வந்திருக்கும் வெளிநாட்டினருக்கு தூத்துக்குடி ஸ்டெர்லிட் நிறுவனம் பற்றி தெரியுமா.


vbs manian
ஜன 07, 2024 15:49

திராவிட மாட லுக்கும் தொழில் வள ர்ச்சிக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லை. காசுபார்க்கும் நிலையில் எந்த தொழிலும் வளராது.


Nagarajan D
ஜன 07, 2024 15:24

அனைத்து மாவட்டமும் பரவலான வளர்ச்சி... சென்னையை தவிர எந்த மாவட்ட வளர்ச்சிக்கு தமிழக அரசு முனைப்பு காட்டியிருக்கிறது? admk & dmk இரண்டு திருடனுங்களும் தமிழகம் என்றால் சென்னை தான் என திரியுறானுங்க... சென்னை அடைந்திருப்பது வீக்கம் வளர்ச்சியல்ல... மாற்றமாவட்டங்கள் சீக்கு வந்து இளைத்து உள்ளது.... மாற்றமாவட்டங்களையும் சேர்த்து வளர்ந்திருந்தால் சென்னை மழையின் பொழுது இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது.... எல்லா தொழிற்சாலையும் சென்னையிலேயே இருக்கவேண்டும்...எல்லா திட்டமும் சென்னைக்கே வழங்கப்படவேண்டும் ஆனால் மொத்த தமிழகமும் வளர்ச்சி காணுமாம்? என்னடா இது பித்தலாட்டம்... கோவைக்கு எந்த வருடம் மெட்ரோ திட்டம் முதலில் தீட்டப்பட்டது? 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது... தேர்தல் வரும் நேரம் மட்டுமே இந்த திரவிஷா ஆட்சியாளர்களுக்கு கோவை மற்றும் மற்ற மாவட்ட வளர்ச்சி பற்றி பேசுவானுங்க... பிறகு அந்த திட்டம் சாத்தியப்படாது என குப்பையில் போடுவானுங்க...கபில் சிபல் மந்திரியாக இருந்தபோது கோவைக்கு IIM போன்ற ஒரு உயர் கல்விநிறுவனம் என்று அறிவித்தார் 10 வருடம் ஆகி விட்டது ... அது என்ன ஆயிற்று 40 MP களும் வாயில் என்ன வைத்துள்ளானுங்களோ எதை பற்றியும் பேசமாட்டானுங்க....


மோகனசுந்தரம்
ஜன 07, 2024 15:20

இவரைப் போன்ற ஒருவரை உலகில் எங்கும் காண முடியாது. தமிழக முதல்வரைப் பற்றி மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் கிண்டல் செய்வதை கேட்கும் பொழுது தோன்றுகிறது.


Suppan
ஜன 07, 2024 15:13

:அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு...: அதே மாதிரி "அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே மத்திய எ அரசின் இலக்கு" என்பதை ஒப்புக்கொள்ளாமல் :ஆஹா வடக்கு வாழ்கிறது" :ஒன்றியம் தமிழகத்தை வஞ்சிக்கிறது" என்று வெற்றுக்கூச்சல் போடுவது ஏனைய்யா .


அப்புசாமி
ஜன 07, 2024 14:34

இவிங்க பேச்சைக்.கேட்டு நம்ப முடியாமல் டி.வி சேனலை திருப்பி நீயா-2 பட கிளைமாக்ஸ் பாத்தேன். மிகவும் நம்பும்படியா இருந்திச்சு.நம்புங்க ப்ளீஸ்.


raja
ஜன 07, 2024 14:33

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு......................என்னாது??? புரியலையே வளர்ச்சி என்பது யாதெனில் கழக உடன்பிறப்புகள் மட்டும் வளர்ந்தால் தமிழ் நாடு முன்னேறிவிடும் அதுதானே உங்கள் இலக்கு? என்ன தலைவரே மாத்தி சொல்லாதீங்க.....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை