உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ள நிவாரணம் ரூ.2 ஆயிரம் போதாது: திருமாவளவன்

வெள்ள நிவாரணம் ரூ.2 ஆயிரம் போதாது: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலூர்: 'தமிழக அரசு அறிவித்த வெள்ள நிவாரணம் ரூ.2 ஆயிரம் போதாது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து எழுந்துள்ளது. புதுச்சேரியில் ஒரு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியிலும் உள்ளது. இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

ரூ.10 லட்சம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்டுள்ள வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அவர் பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ராமகிருஷ்ணன்
டிச 07, 2024 02:37

ஓஓ இதான் தோழமை சுட்டுதலா. விஜய் கூட கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து விட்டதா


sankaranarayanan
டிச 06, 2024 21:35

புதுச்சேரியில் ஒரு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறிய திருமாவளவன் ஒன்றை சொல்ல மறந்துவிட்டார் புதுச்சேரியில் அரசாங்கம் மக்களுக்கு நேரில் பணம் கொடுக்கவில்லை ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அரசாங்கத்தால் அவர்களது வங்கிக்கணக்கில் பணம் போடப்படும் இதனால் இடைத்தரகர்களின் அட்டகாசம் முற்றிலும் அங்கே கிடையாது ஆனால் திராவிட ஆட்சியில் எந்த நிவாரணமும் கட்சிக்காரர்களின் முன்னிலையில்தான் நடைபெற்றுவருகின்றது. அங்கே அவர்களுக்கு உரிய கட்டிங் சன்மானம் போகத்தான் மக்கள் கைக்கு வரும்


நிக்கோல்தாம்சன்
டிச 06, 2024 20:24

என்னது மத்திய அரசா ? ஒன்றிய அரசு என்று கூறும் வாயை நாறவாய் என்று இப்போ கூறலாமா


எவர்கிங்
டிச 06, 2024 20:23

இதை முதல்வரிடம் நேரில் சென்று வலியுறுத்தலாமே?


Raj S
டிச 06, 2024 19:08

ஐயோ சத்தமா பேசிட்டோமே சோத்துல விஷம் வெச்சுருவாங்களே - வடிவேலு காமடி நினைவுக்கு வருது இந்தாளு பேசறதை பாக்கும்போது...


Rajan
டிச 06, 2024 17:23

இதிலென்ன கஞ்சத்தனம் 1 கோடி கேட்க வேண்டியதுதானே? உடனே உங்கள் கூட்டணி அரசும் கொடுத்து விடும். மக்கள் பணம் தானே


சந்திரன்,போத்தனூர்
டிச 06, 2024 19:50

2G புகழ் ஆ.ராசாவின் மனைவி இறந்த போதும், இந்த திருமாவளவனின் சகோதரி இறந்த போதும் அவர்கள் இருவரது உடலும் சவப்பெட்டியில் வைத்து கல்லறைக்கு எடுத்துப் போகும் போதுதான் தெரிந்தது இவர்கள் இந்து அல்ல இந்து பெயரில் ஒளிந்து கொண்டு தலித்துகளுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடு சலுகையை அனுபவித்த கிரிப்ட்டோக்கள் என்ற விஷயம். இப்போது தெரிகிறதா இவர்கள் இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும் இழிவாக பேசியது ஏன் என்று?


sundarsvpr
டிச 06, 2024 16:10

நிவாரண தொகை நாலாயிரம் கோடியில் மிச்சம் இருக்குமே?


RAAJ68
டிச 06, 2024 16:06

நீங்கள் திமுகவிடமிருந்து வாங்கிய பல கோடிகளில் இருந்து உங்கள் சார்பாக நிவாரணம் கொடுங்கள்.


krishna
டிச 06, 2024 14:51

INDHA KURUMA ULAGA MAHA KOZHAI.ARIVAALAYAM AAYUTKAALA KOTHADIMAI. THUNDU SEATTU MIRATTIYADHAAL INDRU AMBEDKAR BOOK VELIYITTU VIZHAVIL VIJAY KOODA NIRKKA BAYANDHU ODIYADHU KEVALAM.


Kumar Kumzi
டிச 06, 2024 13:50

உன்னோட பாஸ் தானே சிபாரிசு பானு சும்மா கூவிட்டு இருக்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை