உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் தமிழகம்; டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி

பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் தமிழகம்; டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; கடந்த சில மாதங்களாக ஆபரேஷன் அகலி மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகர போலீசாருடன், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய அமைப்புகளுடன் இணைந்து, நீண்ட நாள் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fkgkiax4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அபு பக்கர் சித்திக் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. 2வது குற்றவாளி முகமது அலி, 1999ல் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ட 7 வழக்குகள் உள்ளன. ஆந்திராவின் கடப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 3வது டெய்லர் ராஜா. 1996ல் இருந்து 4 வழக்குகள் தொடர்புடையவன். கர்நாடகா போலீசாருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளான். விசாரணை தொடர்ந்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்குட்படுத்த வேண்டும். அதன்பிறகு, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால், முதற்கட்ட விசாரணையிலேயே, தலைமறைவாக இருந்தவர்கள், அந்தந்த ஊரிலேயே டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தனர். மேலும், அடையாள அட்டைகளையும் அடிக்கடி மாற்றி வந்தனர். டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. மற்ற இருவருக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் டெய்லர் ராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. 1996ல் நாகூரில் சைதா கொலை வழக்கு, கோவை ஜெயில் வார்டன் பூபாலன், 1997ல் மதுரை ஜெயிலர் உதவியாளர் ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கு,1998ல் கோவை குண்டுவெடிப்பு வழக்குள் டெய்லர் ராஜா மீது உள்ளது.அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு வழக்கில் 150 அல்லது 160 குற்றவாளிகள் இருக்கும் போது, 2 அல்லது 3 பேர் ரொம்ப நாள் தலைமறைவாக இருந்தாலும், அது வெற்றிகரமான ஆபரேஷன் தான். அதேபோல, ஒரு வழக்கில் தொடர்புடைய 150 பேரும் தலைமறைவாக இருந்தால்தான் அந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டதாக அர்த்தம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

subramanian
ஜூலை 11, 2025 21:46

வேண்டாத அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலில் வைப்பது வழக்கம், ஆனால் இவரை சிரச்சேதம் செய்ய வேண்டும்.


Barakat Ali
ஜூலை 11, 2025 18:35

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கம் .... இம்மூன்றும் பயங்கரவாதத்தின் நிலைக்களங்கள் ....


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2025 17:53

நகைச்சுவை நடிகர்களில் தங்கவேலு சுருளிராஜன் ஒரு ரகம் என்றால் நாகேஷ் வேறு ரகம் .ஆனா நீங்க சிரிக்காம ஜோக் சொல்லி எல்லாரையும் வேற விதமா விழுந்து விழுந்து சிரிப்பா சிரிக்க வச்சுட்டீங்க. அடுத்த மாசம் உங்களுக்கு நகைச்சுவை அரசுன்னு விருது ஒன்னு பார்சல்.


V K
ஜூலை 11, 2025 16:22

அதான் போலீசாரே எல்லா குற்றம் செய்கிறார்கள் பிறகு என்ன


theruvasagan
ஜூலை 11, 2025 15:59

அதாவது நாங்க வன்முறை நாசவேலைகளி்ல் ஈடுபடுகிறவர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்காமல் சமூகநீதி போராளிகளாக கருதுவோம். இந்த முறையில் தமிழகத்தை பயங்கரவாதிகளே இல்லாத மாநிலமாக்குவோம்.


Balasubramanyan
ஜூலை 11, 2025 15:57

Hilarious comedy. These persons gave oral funeral to that terrorist at Kovai. How many years our Scotland police to nab the culprit on Ramajayam murder,the murder of congress leader at thirunelveli,and Vengaivasal incident. Pl.tell Sir.


Sampath
ஜூலை 11, 2025 15:55

சைலேந்திர பாபு நகல் ......பாவம் தமிழக மக்கள்


ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 15:46

இத்தனை நாட்கள் விடியல் ஆட்கள் அறியாமல் டெய்லர் ராஜா ஒளிந்திருக்க வாய்ப்பில்லை. பயங்கரவாதி பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது ஒருவித ஊக்குவிப்பு என்றால் 5000 போலீஸ் காவலாக சென்றது அதைவிட அக்கிரமம்.


ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 15:38

மடப்புரம் அஜித் படுகொலையே போலீஸ் பயங்கரவாதம்தான்.


Sundaran
ஜூலை 11, 2025 15:32

குண்டு வைப்பது மட்டுமே தான் பயங்கர வாதமா .பட்ட பகலில் நடு ரோட்டில் வெட்டி கொலை செய்வது பயங்கரவாதம் இல்லையா .உடன்புறப்பின் செர்டிபிகேட் மாதிரி உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை