உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொருளாதாரத்தில் தமிழகம் பின் தங்கியது: அண்ணாமலை

பொருளாதாரத்தில் தமிழகம் பின் தங்கியது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ‛‛ தமிழகம் பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளது. தி.மு.க அரசு இதனை கவனிக்க வேண்டும் '', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.ஈரோட்டில் தனியார் சார்பில் வருங்கால தலைமுறையினரின் தொழில் முனைவோருக்கான கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் குறைவாக உள்ளது. ஜி.எஸ்.டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும். 2024ம் காலாண்டில் மஹாஷ்டிரா 15, உத்திரபிரதேசம் 12, கர்நாடக 9 தமிழகம் 3.3 சதவிகதமாக வளர்ச்சி உள்ளது. தமிழகம் பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளது. தி.மு.க அரசு இதனை கவனிக்க வேண்டும். தமிழகம் ஜி.எஸ்.டி மாநில வருவாய் மைனஸ் 11 பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது. அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவு நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. தமிழகத்தின் நிலை கவலை அளிக்கிறது. தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி குறித்து பேச்சு எழுந்துள்ளது.52 சதவிகிதம் ஓட்டு இருந்தால் தனி பெரும்பான்மை ஆட்சியாக கருதப்படும். அந்த காலம் முடிந்து விட்டது. தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி ஆட்சி என்று சொன்னால் அரசியல் களம் மாறும். 2026ல் தமிழகத்தில் நான்கு போட்டி உள்ளது. எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள், நல்லவர்கள் வெற்றி பெற முடியும். தமிழக அரசியல், 2026 தேர்தலில் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ramesh
ஆக 10, 2024 22:51

இப்படி மோடி மற்றும் அமித் ஷா விடம் தேர்தலில் பொய்யான களநிலவரத்தை சொல்லி அவர்களை ஏமாற்றம் அடைய செய்தார் ,அதனால் தான் அவர்கள் அண்ணாமலையை சந்திக்க மறுக்கிறார்கள் .நட்டாவை மட்டுமே பார்த்து விட்டு வருகிறார் .அவர்கள் இவரை லண்டனுக்கு விமானம் ஏற்றி விட துடி துடித்து கொண்டிருக்கிறார்கள்


ramesh
ஆக 10, 2024 22:44

அரசியல் என்றால் என்ன கூட்டணி கட்சிகளைஎப்படி அரவணைத்து செல்வது என்ற அரசியல்,ஆதாரம் எதுவும் இல்லாமல் டி கடாயில் உட்க்கார்ந்து பேசுபர்களின் பேச்சை கேட்டு விட்டு அறிக்கை விடுபவர் ,இந்த அரசியல் அரிசுவடி கூட தெரியாத இவர் தமிழ் நாட்டின் பிஜேபி கட்சி தலைவராக இருக்கிறார்


K.n. Dhasarathan
ஆக 10, 2024 21:02

அண்ணாமலை எப்போது பொருளாதார புலி ஆனார் ? பாவம் இவர் பொய்கள் பேசுவது என்பதில் ஒரு அளவே கிடையாதா ? செய்தித்தாள்கள் படிப்பது உண்டா ? அல்லது மற்றவர் படிப்பதையாவது கேளுங்கள், கொஞ்சம் தமிழக அறிவு கிடைக்கும். நீங்கள் கொடுத்த தரவுகளை வைத்து கேஸ் போட்டால் என்ன ஆகும் தெரியுமா ? ஏற்கனவே முதல்வர் வெளிநாட்டில் 9000 கோடி முதலீடு செய்தார் என்று பேசி, வாங்கி காட்டியது மறந்து விட்டதா ?


thank Sathish
ஆக 10, 2024 20:43

வடமாநில மக்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர், தமிழக மக்கள் வடமாநிலங்களை நோக்கி செல்லவில்லை. இது ஒன்று போதாதா தமிழகம் பொருளாதாரத்தில் சிறந்தது என்பதற்கு. பொருளாதாரத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் வந்துவிட்டார் பொருளாதார புலி


venugopal s
ஆக 10, 2024 20:30

மத்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இவற்றை எல்லாம் இவர் படிக்கவே மாட்டாரோ? அவைகள் எல்லாம் தமிழகம் பொருளாதார ரீதியாக மற்ற மாநிலங்களை விட அதிக முன்னேற்றம் அடைகிறது என்று கூறுவது இவருக்கு தெரியாதா?


thank Sathish
ஆக 10, 2024 20:25

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசிடம் பேசி நிதி வாங்கித்தர வக்கில்லாத பாஜாக மாநில கட்சி தலைவர் எப்பொழுதும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார். இவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.


Subramaniam Mathivanan
ஆக 10, 2024 21:14

அதற்கு தமிழக மக்களும் பிஜேபிக்கு பாதி எம்பி க்களாவது கொடுத்து இருக்க வேண்டும். நாங்கள் உங்களை தோற்கடிப்போம். ஆனால் மத்திய அரசு எல்லா உதவி, நிதி தர வேண்டும். ஞாயமாகப் படுகிறதா?


Narayanan Muthu
ஆக 10, 2024 20:01

அப்பட்டமான உளறல். மைக்கை கண்டால்உளறல் வியாதி எப்போது குணமாகுமோ.


Kumar
ஆக 10, 2024 19:29

மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க சொல்லு முட்டா பயலே. தமிழக பொருளாதாரம் முன்னேறிடும்.


கனோஜ் ஆங்ரே
ஆக 10, 2024 18:58

இவர் எப்பய்யா... பொருளாதார மேதை ஆனார்... ஐபிஎஸ்.. படிச்சுட்டு... பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வாங்கிட்டாரா... வாங்கிட்டேன்னு புளுகுனாலும் புளுகுவார்... ஏன்னா, சத்ரபதி சிவாஜி 1967ல சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார்.. அது கல்வெட்டுல இருக்கு..ன்னு சொன்ன ஆளாச்சே....?


ஆரூர் ரங்
ஆக 10, 2024 18:45

துறைமுக வசதியே இல்லாத, ஆண்டுக்கு ஆறு மாதங்கள் கடும் குளிர் அல்லது உயர் வெப்பத்தில் அல்லாடும் வடமாநிலங்களுக்கும் கீழாக தமிழகம் இருப்பது வேதனை .


பாமரன்
ஆக 10, 2024 20:13

அய்யோ பாவம் ரங்கிடு... இந்த ம்மே ம்மேக்கெல்லாம் முட்டு குடுத்து பேச வேண்டிய பரிதாப நிலை... இவர் நீண்ட கால பகோடா... 2014 நேரத்தில் தேஷ்நாஷ்ன்னு ஒரு டூப்ளிகேட் அவதாரத்தில் திரிஞ்சி தேர்தல் பில்லிங் முடிஞ்சதும் அந்த வேஷத்தை கலைச்சிக்கிட்டதுதான் இவரோட மோசமான செயலா இருந்தது... காலத்தின் கட்டாயம் போல இந்த ஆட்டின் கலர் தெரிஞ்சும் பீப்பீ ஊதறாப்ல... வாழவைத்த தமிழ் நாட்டை தூற்றும் பழக்கம் இந்த வர்க்கத்தின் ரத்தத்தில் ஊறியிருந்தாலும்...இப்போ பன்றது சிம்ப்ளி டிஸ்கஸ்டிங் மை லார்ட்... ஸோ சேட்... எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் மொமண்ட்...


மேலும் செய்திகள்