உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருளை ஒரு கிராம் கூட தமிழக போலீசார் பிடிப்பதில்லை: குற்றம் சாட்டுகிறார் கவர்னர் ரவி

போதைப்பொருளை ஒரு கிராம் கூட தமிழக போலீசார் பிடிப்பதில்லை: குற்றம் சாட்டுகிறார் கவர்னர் ரவி

தென்காசி: போதைப்பொருளை ஒரு கிராம் கூட தமிழக போலீசார் கைப்பற்றியதாக தகவல் இல்லை என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த போதை ஒழிப்பு மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, zoho நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு, தென்காசியின் குரல் பவுண்டேசன் தலைவர் ஆனந்தன், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:

* தமிழகத்தில் மத்திய துறையினர் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றுகின்றனர். * தமிழகத்தில் மாநில போலீசார் கஞ்சா தவிர பிற போதைப் பொருட்களை கைப்பற்றியதாக தகவல் இல்லை. * மத்திய துறையினர் தான் கிலோக்கணக்கில் கைப்பற்றுகின்றனர். * போதைப்பொருள் கிடங்குகள் பாக்., துபாய், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன. இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
அக் 07, 2024 10:37

ஜாஃபர் சாதிக் வழக்கு தேங்கிவிட்டது ......... மத்திய உள்துறை சமாதானமாகிவிட்டது ..... இவர் அநேகமாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படலாம் .... பாஜக-திமுக கூட்டணி அநேகமாக உறுதியாகிவிட்டது எனலாம் .....


அப்பாவி
அக் 06, 2024 23:57

ஏன் சி.பி.ஐ, என்.ஐ.ஏ , ரா வை ஏவி விட்டு புடிக்க வேண்டியதுதானே...


Arachi
அக் 06, 2024 22:17

சில பேருக்கு எப்போதாவது நட்டு கழந்துரும். இவருக்கு எப்போதும் கழந்துதான் இருக்கும். கவர்னர் எப்போதும் நடுநிலையாக இருக்க வேண்டும். அரசியல் பேசக்கூடாது. சரியான கொசு கடி.


Constitutional Goons
அக் 06, 2024 21:46

இவர் கவர்னரா? மோடியின், பாஜவின் எடுபிடியா?


sankar
அக் 06, 2024 22:12

யாராவேனா இருக்கட்டும் - உண்மையைத்தான் சொல்கிறார்


narayanansagmailcom
அக் 06, 2024 21:20

திமுக ஆட்சி நடக்கும் வரை தமிழ்நாடு போலீஸ் எதையும் பிடிக்காது


raja
அக் 06, 2024 16:27

என்ன பன்ன்றது அய்யா... கடத்தி விக்கிறவன் எஜமானா இருந்தால் அவனுக்கு கீழ் வேலை செய்யும் அடிமை எப்படி பிடிக்கும்..