உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலுக்கு 8 மாதத்திற்கு முன்னரே தமிழக அரசியல் கட்சிகள்...சுறுசுறுப்பு! : மாநாடு, சுற்றுப்பயணம், ரோடு ஷோ, கூட்டணி பேச்சில் தீவிரம்

தேர்தலுக்கு 8 மாதத்திற்கு முன்னரே தமிழக அரசியல் கட்சிகள்...சுறுசுறுப்பு! : மாநாடு, சுற்றுப்பயணம், ரோடு ஷோ, கூட்டணி பேச்சில் தீவிரம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவக்கி விட்டன. மக்களை கவர, மாநாடு, தலைவர்கள் சுற்றுப்பயணம், ரோடு ேஷா, கூட்டணி பேச்சு என, அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக செயல்பட துவங்கியுள்ளன.தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன், மார்ச்சில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அதற்கு எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.ஆளுங்கட்சியான தி.மு.க., ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன், பா.ம.க., - தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க ஆலோசனை நடத்தி வருகிறது.அத்துடன், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குறைந்தது 30 சதவீதம் பேரை, கட்சியில் உறுப்பினராக சேர்க்க, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி உள்ளது.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து, ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி, அவர்களை கட்சி உறுப்பினராக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 'மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்' எனக்கூறி, மக்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலினும் மாவட்டங்களுக்கு செல்லும் போது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்; மக்களை சந்திக்க, 'ரோடு ேஷா' நடத்துகிறார்; கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளையும் முடுக்கி விடுகிறார்.பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளது. அக்கட்சி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்த நிலையில், மெகா கூட்டணியை உருவாக்க, பா.ம.க., - தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி போன்றவற்றுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகிறது.அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, மக்களை நேரடியாக சந்திக்க, தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை, இன்று காலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவக்குகிறார். சுற்றுப்பயணத்தின் போது மக்களை சந்திக்க, ரோடு ஷோவும் நடத்த உள்ளார்.அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., கட்சி, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, சென்னை அடுத்த காட்டாங்கொளத்துாரில் நேற்று நடத்தியது. தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், அடுத்த மாதம் முதல், மண்டல வாரியாக ஏழு மாநாடுகளை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.புதிதாக கட்சி துவக்கி உள்ள நடிகர் விஜய், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். செப்டம்பர் முதல் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். தி.மு.க., - பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள விஜய், த.வெ.க., தலைமையிலான கூட்டணியில், இணைய விரும்பும் கட்சிகள் வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே அவர் கூட்டணி ஆட்சி என அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் உள்ள பல கட்சிகளிடம் ஆசையை துாண்டி உள்ளது. இதுவரை தனித்து போட்டியிட்டு வரும், நாம் தமிழர் கட்சியை, கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க., தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., போன்ற கட்சிகள், வரும் தேர்தலில் தங்களுக்கு கூடுதல், 'சீட்' ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மேலிடத்திடம் வலியுறுத்த துவங்கி உள்ளன. பா.ம.க.,வில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் தி.மு.க., அணியுடனும், அன்புமணி தரப்பில் அ.தி.மு.க., கூட்டணியுடனும் ரகசிய பேச்சு நடந்து வருகிறது.தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., என நான்கு அணிகள் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், த.வெ.க., - நா.த.க., உடன் ரகசிய பேச்சு நடந்து வருகிறது. எனவே, தேர்தலில் எத்தனை அணிகள் களம் இறங்கும் என்பதை, தற்போது உறுதியாக சொல்ல முடியாத நிலையே உள்ளது.அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு தயாராவதால், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. விரைவில் அதிரடி காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

V RAMASWAMY
ஜூலை 07, 2025 15:01

நாத்திகவாதத்தையும், இந்து வெறியையும், இந்து கோயில்களையும் தாக்கி பேசும் கட்சியை மீண்டும் அரசாள வைப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் ஹிந்துக்களும் தங்கள் தலைகளில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டதற்கு ஒப்பாகும். ஒரு தடவை அனுபவித்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பது போதாதா வாக்காளர்களே?


Ganesan
ஜூலை 07, 2025 14:04

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு.... நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்


Ganesan
ஜூலை 07, 2025 14:04

சங்கிகள் புகுந்த நாடும் வீடும் விளங்காது என்பது இப்போது தான் புரிகிறது மக்களுக்கு விழிப்புணர்வுத் தேவை


guna
ஜூலை 07, 2025 14:11

வாழ்நாள் கொத்தடிமையாக இருக்க கடவாய் ...உன் சந்ததியும் சேர்த்து .....


Mettai* Tamil
ஜூலை 07, 2025 16:00

நாத்திக இந்து விரோத ஊழல்கள் புகுந்த நாடும் வீடும் விளங்காது என்பது இப்போது தான் புரிகிறது .2026 தேர்தலில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் தேவை..


Ganesan
ஜூலை 07, 2025 16:49

குண, உன் சந்ததி தான் மிக மிக்க கேவலமான கொத்தடிமை கூட்டம். நாங்களெல்லம் சுய மரியாதையை விரும்புவார்கள் ...


R.PERUMALRAJA
ஜூலை 07, 2025 11:55

வெல்லும் தமிழகம், ஓரணியில் தமிழகம், நீந்தி பின் கரை சேரும் தமிழகம் என்றும் பிரிவினைவாத வசனங்களை தமிழம் முழக்க சுவற்றில் எழுதி, அதை முன்னெடுத்தி தெருமுனை கூட்டங்கள் போட்டு ஏதோ தமிழக மக்களுக்கு மத்திய அரசால் நாளை காலையே பெரிய தீங்கு நடைபெற இருப்பதுபோல மக்களின் emotions னுடன் விளையாடி ஆட்சி அதிகாரத்தில் மீண்டும் அமர குள்ளநரித்தன வேலைகளை தி மு க செய்து கொண்டு இருக்கிறது, தமிழக மக்களின் இந்தி எதிர்ப்பு மனநிலையை எப்படி தி மு க வாக்குகளாக மாற்றி ஆட்சியில் அமர்ந்ததோ அது போல பிரிவினைவாததையும் இம்முறை தி மு க சாமர்த்தியமாக கையில் எடுத்திருக்கிறது , எடப்பாடி ,விஜய் , சீமான் போன்றோர் , பிரச்சாரம் மற்றும் நல்வழி அரசியல் செய்தால் மட்டும் போதாது மக்களை குழப்பி அரசியல் செய்யவும் தெரிந்திருக்கவேண்டும் .


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 07, 2025 12:55

கடவுளை காப்பற்றவேண்டும் கோஷத்தை கேவலமாக கையில் எடுப்பது என்னவிதமான வாதம்? கடவுளை சீர்கெட்ட சங்கிகளிடம் இருந்து கடவுளே தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே நிதர்ஸனம்.. அல்லது இந்த இழிந்த மக்களால் காப்பற்றப்பட வேண்டிய கீழ்நிலையிலா கடவுள் இருக்கிறார்? அந்தவகையில் மதவாதத்தை எடுத்து தமிழக மக்களை குழப்ப முடியவே முடியாது ஹிந்தி எதிர்ப்பு மனநிலைக்கு தமிழக மக்களை ஒன்றியம் தானே தள்ளியது? அதை வாகாக திமுக எடுத்து மக்களின் விழிப்புணர்வை மீட்டெடுக்குது ....தமிழர் விரோத நிலைப்பாடுகளை தொடர்ந்து ஒன்றியம் எடுத்துவருவது உங்கள் கண்களுக்கு புலனாகவில்லையா? கீழடியாகட்டும் ....கல்விக்கான நிதி ஒதுக்கீடாகட்டும்... பேரிடர் மீட்புக்கான நிதி ஒதுக்கீடாகட்டும் .... ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணித்து ஆந்திராவுக்கு பீஹாருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் குஜராத்துக்கு அள்ளி வழங்குவதை தமிழர்கள் புரிந்து வைத்துள்ளனர். இதெல்லாம் செய்துவிட்டு எந்தமுகத்துடன் தமிழர்களை அவர்களுக்கு வாக்களிக்க கோருவார்கள் ??


vivek
ஜூலை 07, 2025 11:19

உமது மூளை பத்திரம்.....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 07, 2025 08:54

நான்கு முனை போட்டி என்பது ஓரளவுக்கு தெரிந்துவிட்டது.. நான்குமுனை போட்டியில் தப்பி தவறி எதாவது ஒரு கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி வேறு எங்காவது சென்றால் கூட இந்த ஆளும் திமுக கூட்டணி பலம் முன்னே மீதி கூட்டணிகள் எல்லாம் புஸ்ஸு தான் ......குறிப்பாக சொல்லிக்கொள்ளக்கூடிய அதிமுக கூட்டணியின் முரண்பாடுகள் அந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கு காரணியாக இருக்கும் ...சென்ற பாராளுமன்ற தேர்தலில் எப்படி எடப்பாடிக்கி மோடியின் வெற்றி பிரதானமாக தெரியாமல் போனதோ அவ்வண்ணமே இந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியின் வெற்றியொயும் bj கட்சிக்கு பிரதானமாக இருக்காது. குடிகெடுப்பது மற்றும் கூடி கெடுப்பது ...இது தான் அந்த கூட்டணியின் உள்கோஷம்... இந்த நிதர்சனம் தெரிந்தும் வாய்ச்சவடால் அடித்து தான் அரசியல் செய்யவேண்டிய இக்கட்டான நிலைக்கு மீதி கட்சிகள் தள்ளப்பட்டு உள்ளன .... திமுக கூட்டணிக்கு 200 இடங்களுக்கு மேல் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது ....


Oviya Vijay
ஜூலை 07, 2025 09:43

இதையே தான் நான் பலமுறை கூறினாலும் சங்கிகளின் கண்களுக்கு அவர்களின் தோல்வி புலப்பட மாட்டேன் என்கிறது... பாவம்... மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்...


vivek
ஜூலை 07, 2025 11:18

சூரியன் அஸ்தமனம் ஆகிறது என்று தெரியும்....அதோடு ரூபாய் இருநூறு போய்விடும்.....அதுதான் அளவுகடந்த புலம்பல்


Oviya Vijay
ஜூலை 07, 2025 05:48

தேர்தல் ரேஸின் முடிவில் திமுக கூட்டணி முதலிடத்திலும், தவெக இரண்டாமிடத்திலும் மற்றும் (பாஜக) (அதிமுக) கூட்டணி மூன்றாமிடத்திலும் இடம்பெறும்... நாதக கட்சியை மக்கள் முற்றிலுமாக புறந்தள்ளியிருப்பர்... கொரோனா இரண்டாம் அலையின் போது எவ்வாறு மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைந்தனரோ அதே போல் 2026 தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் சங்கிகள் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் வெறுத்துப் போய் வேறு வழியில்லாமல் நடைபயணமாகவே சென்று மருத்துவமனைகளில் அட்மிட் ஆகிக் கொள்வர்... மீண்டும் மீண்டும் நான் கூறிக்கொண்டே இருக்கிறேன்... அன்றைய தினம் சங்கிகளின் இதயங்கள் பத்திரம்...


sridhar
ஜூலை 07, 2025 07:38

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், 200 ஓவாக்கு ரெண்டு வரி போதும். ஓவரா கூவாதீங்க .


vivek
ஜூலை 07, 2025 07:39

பாவம்.. இதயம் பத்திரம் பத்திரம் சொல்லிட்டே இருக்கார்... உமக்கும் அதே இதயம் தானே


guna
ஜூலை 07, 2025 07:40

ஓவிய விஜய் கதறல் நல்ல தமாசா இருக்குப்பா


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 01:36

உதயசூரியன் ஏற்கனவே உதித்துவிட்டதால், ரெட்டை இலையின் மேல் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 07, 2025 08:21

இது தான் சரியான bj கட்சி -அமித்திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார யுக்தியாக இருக்கவேண்டும்.. அப்புறம் கூட்டணி ஆட்சி என்ற விஷயத்தை ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தவறாமல் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் மக்கள் மனதில் நன்கு பதியும்... மக்கள் வெச்சி செய்வார்கள்...


Haja Kuthubdeen
ஜூலை 07, 2025 10:23

யார வச்சு போறாங்க 200 ருபீஸ்...


A viswanathan
ஜூலை 07, 2025 23:21

குணாவுக்காக வருந்துகிறேன். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை.இந்ந ஆட்சியில் நிறைய பலன் பெற்று இருக்கலாம்.நான் நினைப்பது ஆட்சிமாற்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை