உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிகமாக மழைப்பொழிவு

தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிகமாக மழைப்பொழிவு

சென்னை: கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலைமையம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ayzyb94p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்குபருவமழை தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி உள்ளது.தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பதிவாகியது.5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லை.கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 245.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.இதே காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 124.9 சதவீதம்97 சதவீதம் மழை, இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.சென்னையை பொறுத்தவரை,இதே காலகட்டத்தில் பதிவான மழை அளவு -120 மி.மீ.,இயல்பான அளவு - 50 மி.மீ.,இயல்பை விட 129 சதவீதம் அதிகம்மாவட்ட வாரியாக இயல்பை விட மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்த மாவட்டங்கள் 29இயல்பை விட அதிக மழைப்பொழிவை சந்தித்த மாவட்டங்கள்:11கடந்த 8 நாட்களில் ( மே 23 முதல் 31 வரை)அதிகபட்சமாக அவலாஞ்சியில் 1410 மி.மீ., சின்னக்கல்லாறில் 1010 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.வெப்பநிலைமார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வேலூரில் 16 நாட்கள் கரூர் மாவட்டம் கரூர் பரமத்தியில் 10 நாட்கள் 40 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகியது.ஈரோடு மாவட்டத்தில் மே 15 ம் தேதி 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம் இதுவாகும்.வேலூரில் மே 4, 7 ஆகிய நாட்களில் 41 டிகிரி செல்சியஸ்மதுரை விமான நிலையத்தில் மே 13, 14 ஆகிய நாட்களில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.சென்னையில் வெப்பநிலை, கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியசை தொடவில்லை. மே 4,5 ஆகிய நாட்களில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த ஐந்தாண்டுகளில் வெப்பநிலை 40, 41 டிகிரி செல்சியசை தாண்டிய நிலையில் இந்தாண்டுதான் 40 டிகிரியை தொடவில்லை.தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை இந்தாண்டு இந்தியாவில் அதிகமாக பதிவாகும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.அடுத்த 4 மாதங்களில் தமிழகம், புதுச்சேரிக்கு வர வேண்டிய மழை அளவு 33 செ.மீ.,ஆனால் வரும் என எதிர்பார்க்கப்படும் மழையளவு 36 செ.மீ., இது 110 சதவீதத்திற்கு மேல் அதிகம் பதிவாகும் என கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.வட உள் மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும்மற்ற மாவட்டங்களில் இயல்பான அளவாகவும், அதனை காட்டிலும் அதிகமாகவும் மழை பொழியக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிக மழை பதிவான மாவட்டங்கள்

மார்ச் 1 முதல் மே 31 வரையில் கள்ளக்குறிச்சி - 276 %திருநெல்வேலி - 260 %கடலூர் - 223 %கோவை - 217 %விழுப்புரம் - 217 %திருவாரூர் - 214 %அரியலூர் - 192 %நீலகிரி - 182 %நாகப்பட்டினம் - 170%மயிலாடுதுறை - 161%தஞ்சாவூர் - 158 %திருவண்ணாமலை - 135 %சென்னை - 129 %தென்காசி - 109 %திருவள்ளூர் - 106 %வேலூர் - 109 %ராமநாதபுரம் - 104 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V Venkatachalam
மே 31, 2025 22:28

துச்சாதனன் துரைமுருகன் காட்டில் மழையோ மழை.. காவிரி தண்ணீருக்காக கர்நாடகா சித்து விடம் தண்ணீர் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்..


D.Ambujavalli
மே 31, 2025 18:45

கணக்கெல்லாம் கச்சிதமாகக் காட்டி என்ன பயன்? தண்ணீரை சேமிக்கும் வழி எதுவும் செய்த பாடில்லை வழக்கம்போல் ஜனவரியிலேயே லாரிகள் ஓடி, கூடங்களின் மோதல்தான் கேட்கப்போகிறது கடவுள் தாராளமாக மழையைத்தான் கொடுப்பார், அணைகளும், தடுப்புகளுமா கட்டித் தருவார்?


சிட்டுக்குருவி
மே 31, 2025 18:43

நீர் சேமிப்பு நடவடிக்கை சிறப்பாக அமைந்திருந்தால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்கக்கூடாது .இருந்த ஏரிகளெல்லாம் வீடுகளாகிவிட்டது .


சமீபத்திய செய்தி