உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு இந்த மையம் உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அண்ணா, கருணாநிதி வழியில், ஈ.வே.ராவின் கனவை நினைவாக்கும் விதமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை உள்ளிட்ட திட்டங்களை உதாரணமாக சொல்லலாம். பெண்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதன் அடுத்த கட்டமாக, பெண்கள் உயர்கல்வி உறுதி செய்யும் விதமான திட்டங்களை உறுதி செய்து வருகிறோம். விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. பெண்கள், அதிகாரம், உலக அறிவை பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகமே உயர்ந்து நிற்கும். பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் திட்டத்தை தொடங்கி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சி பணிகளை கொடுத்து வருகிறோம், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ram
ஜன 03, 2025 04:57

எப்படியெல்லாம் இப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம்ல் பேசுவது உங்களால் மட்டுமே முடியும்.


Murugesan
ஜன 02, 2025 21:53

கழிசடைகள்


Nagarajan S
ஜன 02, 2025 18:35

அப்போ கனிமொழியை உடனடியாக முதல்வராக்கி விடுவாரோ?


Anvar
ஜன 02, 2025 19:42

நான் நினைத்ததை சொல்லிடீங்க .. யாரு எழுதி கொடுத்தாத படிச்சாச்சு .. முதல்ல கட்சியிலிருந்து ஆரம்பிக்கட்டும்


Gopalan
ஜன 02, 2025 17:56

என்னய்யா!! ஒரே வேடிக்கை. வீட்டில் ஆதிக்கம் கம்மி ஆக முடியுமா? உங்களுக்கு புரியும் இருந்தாலும் அரசியல் செய்யாமல் அவியல் செய்வார்கள் என்று கூறியவர் நீங்கள்.


Bala
ஜன 02, 2025 17:15

சிறுபான்மையினர் ஓட்டு, இலவசங்களுக்கு அடிமை இருக்கிற வரைக்கும் எங்கள் யாரும் அசைச்சிக்க முடியாது. என்ன வேணா புளுகுவோம்.


Bala
ஜன 02, 2025 17:13

ஒரு 1000 ரூபாய குடுத்துட்டு வெட்கமே இல்லாமல் எப்படி புளுகுறார்.சட்டம் தெரியாத அமைச்சர் ரகுபதி சொன்னது இவருக்கு தான் பொருந்தும்.


Bala
ஜன 02, 2025 17:09

,பாத்து ஆண் அமைச்சர் சில பேருக்கு கக்கா வந்துட போகுது.


Kasimani Baskaran
ஜன 02, 2025 17:01

அப்ப துணை முதல்வர் முதல்வராகப்போவது கிடையாது... துணைவியார் முதல்வராகப்போகிறார் போல.


Sivasankaran Kannan
ஜன 02, 2025 16:53

கோமாளி ஒருவன் அரசவையில் நுழைந்தால் அவன் அரசனாக மாட்டான், அரசவை சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும்.. - துருக்கி பழமொழி.. நம்மிடம் திராவிட கோமாளி கூட்டம் குடும்பமாக அரசவையில் உள்ளது.. நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது, கொடுமைகள் பல அனுபவிக்க தமிழ் மக்கள் பழகி கொள்ள வேண்டும்..


sankaranarayanan
ஜன 02, 2025 16:51

தினந்தோறும் திராவிட மாடல் அரசியலில் பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று இப்போது சொல்வது சரியா நாள் தவறாமல் பெண்கள் பாலிய கொடுமைகளுக்கு ஆளாகி மடிகின்றனர் இவரது சொல்லும் செயலும் நேர் மாறாகவே உள்ளன