உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில பாட திட்டத்தில் திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது:கவர்னர் ரவி வேதனை

மாநில பாட திட்டத்தில் திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது:கவர்னர் ரவி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி:மாநில பாட திட்டத்தில் திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. என, கவர்னர் வேதனை தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலை துணைவேந்தர்களின், 3ம் ஆண்டு மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. மாநில கவர்னர் ரவி பங்கேற்று, துணை வேந்தர்களுக்கு சான்றுகளை வழங்கி பேசியதாவது, இந்தியாவில் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் நோக்கி செயல்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் உயர் கல்வி, வேலை வாய்ப்பு, எதைப்படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.கல்வியாளர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்த வேண்டும்.ஆனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 50 சதவீத காலிபணியிடங்கள் உள்ளன. பல கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் தான் பாடம் நடத்துகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலையா?

கல்லூரி மாணவர்களை அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இது தான் கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலையா? உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை பள்ளிகளின் தளவாட பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படுகிறது.மாநிலத்தில் ஆண்டுக்கு, 1500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். அதில், 5 சதவீதம் மாணவர்களே தரமிக்கவர்களாக இருகின்றனர். பிறரின் தரம் கேள்விக்குறியாக உள்ளது.நெட் தேர்வு குறித்து தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு உள்ளது. அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால், குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர். மாநில பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாறு மட்டுமே பாடத்திட்டத்தில் உள்ளது. தமிழகத்தில் பிற சுதந்திரப் போராட்ட தியாகிகள், இயக்கங்கள் குறித்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு வேதனை அளிக்கிறது. அதேபோல் தலித் தலைவர்களை பற்றி அதிக வரலாறுகள் இல்லை.ஆனால், திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. வரலாற்றை மறைப்பது அவமதிப்பதாகும். உயர் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிய வேண்டும். அறியாவிட்டால் நாம் பின் தங்கிவிடுவோம். இதனால், ஏற்றதாழ்வு அதிகரிக்கும். தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உலகில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். நம் நாடு முன்னேறி வரும் நாடாக உள்ளது. மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார்கள். அவர்களை நீங்கள் சரியான வழியில் வழி நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

தமிழ்வேள்
மே 29, 2024 20:07

சந்தான லட்சுமி புராணம் கூட திராவிட டுபுக்குகளால் எதிர் வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்.. திண்டுக்கல் ஐசக் லியோனி தீவிர ஆலோசனை...


subramanian
மே 29, 2024 16:39

தமிழ் தாய் வாழ்த்தை திரித்து வெளியிட்டு குரூர இன்பம் கண்டவன் கருணாநிதி.


venugopal s
மே 29, 2024 11:45

சும்மா புலம்புவதை விட்டு உங்கள் பாஜக மத்தியில் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு மாற்றியது போல் தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கலாமே!


subramanian
மே 29, 2024 16:29

வேணுகோபால் உங்கள் உள்ளத்தில் பா ஜ க எதிர்ப்பு ஊறி விட்டது. திராவிட விடம் உங்களை பாடாய் படுத்துகிறது. உண்மை உணர மறுக்கிறது. இந்த நிலை மாற பிரார்த்தனை செய்யுங்கள்.


Lion Drsekar
மே 29, 2024 10:55

கரிசல் மண், வண்டல் மண், ஆற்று மண் , களிமண் , செம்மண் , இப்படி பல மண்களின் தொகுப்பு ஒரு ஊர் அல்லது ஒரு நாடு , அந்த மொத்த மண்ணுக்குமே ஒரு பெயரை சூட்டி அழகுபார்க்கும் பெருமை எங்களுக்கு மட்டுமே உண்டு அந்த மண் பெரியார் மண் . இந்த ஒரு மண் இல்லையென்றால் இந்த நாடே இருக்காது . இன்றைக்கு எல்லா மண்வளங்களும் செழுப்புடன் இருக்கக்காரணமே இந்தஒரு மண்தான் . வந்தே மாதரம்


rama adhavan
மே 28, 2024 21:54

உண்மை. பூனைக்கு யார் மணி கட்டுவது? தமிழக பாரம்பரிய கலாச்சாரம், இறையாண்மை, ஆன்மீகம் முதலியவை கல்வி திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எல்லாமே இருந்தது. இப்போது இருட்டடிப்பு நிலை.


sankaranarayanan
மே 28, 2024 21:22

திராவிட தலைவர்கள் என்று ஓங்கோல் முத்துவேல் கருணாநிதி ஒருவரைப்பற்றித்தான் அதிக கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்து பள்ளிகளில் கல்லுரிகளில் எல்லா வகுப்புக்களில்கும் அவரைப்பற்றியே பாடநூல்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன ஏன் வேறு எந்த அரசியல் தலைவர்களும் திராவிடத்தில் இல்லையா ஏன் இந்த போக்கு அண்ணாவைப்பற்றியோ காமராசரைப்பற்றியோ அல்லது வேறு எந்த திராவிட தலைவர்களைப்பற்றியோ ஒரு வார்த்தைகூட இல்லையே


முருகன்
மே 28, 2024 21:08

திராவிடத்தை நினைத்து நித்தம் தூக்கம் இன்றி தவிக்கும் இவர்களை நினைத்து சிரிப்பு வருகிறது இப்போது கல்வியில் எந்த இடத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளது என நிருபிக்க முடியுமா


ஆரூர் ரங்
மே 28, 2024 21:58

ஒரு IITJEE, GATE, CMAT, NET , CUET தேர்வுகளில் தமிழக வெற்றி விகிதம் எவ்வளவு?.IAS தேர்வில் பிஹாரை விட மிகவும் பின்தங்கிய நிலையில். நீட்டைக் கண்டாலே( வேறு யாருக்குமே இல்லாத) பயம். கல்வித்தரம் சிரிப்பாய் சிரிக்கிறது.


subramanian
மே 29, 2024 16:35

நீ உயர்வாக நினைக்கும் திராவிடம் பொய் என்று புரியும் போது எப்படி இருக்கும் உனக்கு? இதை பற்றி சிந்திக்க உன்னை விட மாட்டான் அந்த அரசியல்வாதிகள். உண்மையைத் தேடி புரிந்து கொள்ள வேண்டும்.


Ramesh Sargam
மே 28, 2024 21:05

ஆட்சி மாறும். அப்பொழுது அவை அனைத்தையும் நீக்கிவிடலாம்.


தமிழ்
மே 29, 2024 12:33

எப்போ. 3100 ஆம் வருஷத்திலேயா?


GMM
மே 28, 2024 21:03

அனைத்து திராவிட இயக்கங்களும் அடியோடு ஒழிந்தால் தான் உண்மை வரலாறு படிக்க முடியும். திராவிட கூட்டத்தில் பல தலைவர்கள் தனி மனித, குடும்ப, சமூக ஒழுக்கம் இருந்து இருக்காது. காங்கிரஸ் வகுத்த சட்ட குறைபாடுகள் திராவிட அரசியல் கட்சிகள் அதிகாரம் பெற்றன. பல்கலை பாட திட்டத்தில் புனையப்பட்ட வரலாறு. தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு மற்றும் அந்நிய ஊடுருவல் காரர்கள் ஆதிக்க வரலாறு அறிய வேண்டும். அப்போது தான் தேசிய சிந்தனை வளரும்.


N MARIAPPAN
மே 28, 2024 20:42

So what?


hari
மே 28, 2024 21:03

so what.. we are busy in tasmac.....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை