உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று த.வெ.க., நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!

இன்று த.வெ.க., நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை பனையூரில் இன்று (ஜன.,10) தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடை பெற உள்ளது. கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மிக பிரமாண்டமான வகையில், த.வெ.க., மாநாட்டை நடத்தி, நடிகர் விஜய் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார். இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதைத் தொடர்ந்து, அரசியல் களம் சூடு பிடித்தது. தமிழகத்தில் மாற்று அரசியலை முன் வைத்தவர் விஜயகாந்த். அந்த வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு, விஜய்க்கு பிரகாசமாக உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் இறங்குகிறது. தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து களம் காண்பதா என்பதை இன்னும் விஜய் அறிவிக்கவில்லை. அதேநேரம், கட்சி வளர்ச்சி பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் மும்முரம் காட்டி வந்தார்.இந்நிலையில், சென்னை பனையூரில் இன்று (ஜன.,10) தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடை பெற உள்ளது. 10 மணிக்கு கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்கிறார். 100 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். நான்கு மாதங்களாக மாவட்ட செயலாளர் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதிச் செய்யப்படுகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ள மாவட்ட செயலாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வாக்கெடுப்பு முறையில் 100 மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். புதிய மா.செ.,க்களுடன் கூட்டம் முடிந்ததும் விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.தொழிற்சங்கம் அமைக்கப்பட உள்ளது. தொழிற்சங்கம் நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மகளிர், மாணவர், இளைஞர் உள்ளிட்ட அணிகளை உருவாக்க அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Madras Madra
ஜன 09, 2025 17:52

வேற என்ன சீமானுக்கு பதில் சொல்ல கெளம்பிட்டாரு


Laddoo
ஜன 09, 2025 17:20

விசை அண்ணே கேரவான்லியே மீட்டிங் வச்சு லைவ் டெலிகாஸ்ட் பண்ணிடுங்க. சாம்பார் தயிர் சாதம் வாட்டர் பாட்டில் மிச்சம். புஸ்ஸிக்கு மட்டும் பிரியாணி குவாட்டர் பார்சல்


Rajarajan
ஜன 09, 2025 17:18

அப்படி என்ன பேசப்போறீங்க student ?


R. SUKUMAR CHEZHIAN
ஜன 09, 2025 16:12

?????????


sundarsvpr
ஜன 09, 2025 14:20

விஜய் மதம் மாறியுள்ளார் சொல்ல ஏன் தயக்கம்.? நம்பகத்தன்மை கேள்விக்குறியாய் இருக்கிறது. தி மு க வில் ஸ்டாலின் ஹிந்துமத கடவுகளிடம் நம்பிக்கை மட்டும் இல்லாதவர். ஆனால் அவர் துணைவியார் ஹிந்து திருக்கோயில்களாக போய் வருகிறார். ஏமாற்றும் தன்மையா என்ற சந்தேகம் எழுவதில் நியாயம் தான். உதயநிதி மட்டும் உண்மையை கூறியுள்ளார். கிறிஸ்துவர் என்று. இவரை நம்பலாம். சீமான் வை.கோ இவர்கள் ஹிந்து இல்லை என்பதனை கூற தயங்கவேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 09, 2025 18:29

அதான் தமிழ்நாட்டில் மதவாதம் விரும்பப்படுவதில்லையே இன்னுமா இதையே பேசுவீர்கள்?


Ramesh Sargam
ஜன 09, 2025 13:37

ஜெயலலிதாவை ஆட்டிப்படைத்த சசிகலாவை போன்று, விஜய்யை ஆட்டிப் படைக்கிறார் அந்த புஸ்ஸி ஆனந்த். விஜய் இப்பவே விழித்துக்கொண்டால் நல்லது.


Laddoo
ஜன 10, 2025 07:16

விழிக்கல்லாம் வேணாம். கேரவன்லேயே நல்லா தூங்கலாம். கனவு வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை