உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்டோபர் 27ல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு: விஜய் கொடுத்த அப்டேட்

அக்டோபர் 27ல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு: விஜய் கொடுத்த அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்தார்.இது குறித்து சமூகவலைதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் பேரன்புடனும், பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ca72enbd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதல் மாநாடு!

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

வலிமையான அரசியல்

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழக மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!!. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Vijay D Ratnam
செப் 21, 2024 16:16

ஆக்டொபர் 27 க்கு ஓகே சொல்லிட்டாரா ஓனர்


Periya Sangi
செப் 20, 2024 20:37

நடிகர்களுக்கெல்லாம் இனி தமிழகத்தில் இனி வேலையில்லை தமிழ்நாட்டின் ஒரே விடிவெள்ளி அண்ணாமலையார் மட்டுமே ஆளப்போகிறான் உண்மைத்தமிழன்???


Periya Sangi
செப் 20, 2024 20:35

இவர் தீம்காவின் பி டீம். நடிகர்களெல்லாம் சொந்த காசை செலவு செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்களின் மொதலாளி ரெட் ஜெயண்ட் ஆச்சே. அவர்களை பகைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது, அவியல் தான் செய்யலாம். இப்படித்தான் ரஜினியும், டிவிட்டர் சிஎம் கமலும் கோபாலபுரம் அண்டு கம்பேனியிடம் சரண்டர் ஆகிவிட்டனர். கட்டவேண்டிய வரியை கட்டாமல் அரசை ஏமாற்றுபவெரெல்லாம் நாட்டை ஆளதுடிப்பது அபத்தம். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலையார் மட்டுமே ஆளப்போகிறான் பச்சைத்தமிழன் மலையார்???


என்றும் இந்தியன்
செப் 20, 2024 17:26

டாஸ்மாக் வெட்டி கலக்கம்" என்பது தான் கட்சியின் உண்மையான பெயர்


sampath
செப் 20, 2024 17:04

இவருக்கு வேற வேலை இல்லை என்றால் அப்படி ஓரமாகப்போயி விளையாடுங்கப்பா


sampath
செப் 20, 2024 17:02

விரைவில் திராவிட வெற்றிக் கழகம் என மாற்றப்படுமா....ஏனெனில் அப்படித்தான் இப்போது போகுது.. சிவாஜி, மூப்பனார், சிரஞ்சீவி, கமல் போன்றோர் கட்சககள் போல இதுவும் ஆகத்தான் போகிறது. அதற்குள் ஒரு தேவையில்லாமல் பில்டப்


Saravanan R
செப் 20, 2024 16:59

??????????????


sampath
செப் 20, 2024 16:59

எந்த சித்தாந்தை தலைமை ஏற்று நடத்தப்போகிறாரோ...


Saravanan R
செப் 20, 2024 16:59

நடிகர் விஜய் மாநாட்டை வரவேற்போம் அவைரும் வருக


sampath
செப் 20, 2024 16:57

ஏம்பா இந்த வேலை. இனியாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு என ஒன்று நடக்குமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை