உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை பூமி பூஜையுடன் துவக்கம்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை பூமி பூஜையுடன் துவக்கம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிக்காக நாளை 4 ம் தேதி வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடக்க உள்ளது. தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இதற்கான பணி, நாளை 4ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையில் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள், மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டு பணியை துவக்க உள்ளனர் இதற்காக மாநாட்டிற்கு இடம் வழங்கிய நில உரிமையாளர்கள் 25 பேரை நேற்று இரவு 7.15 மணிக்கு மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி , மாவட்ட தலைவர் குஷி மோகன், துணைத்தலைவர் வடிவேல், வழக்கறிஞர் அரவிந்த், இளைஞரணி தலைவர் மோகன், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Lion Drsekar
அக் 04, 2024 07:23

இந்த கட்சியும் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று எங்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் தேங்க்ஸ் , சாரி என்பது போல் ஒரு வாழ்த்து சொன்னால் நன்றாக இருக்கும் என்று ஏங்குகிறார்கள்,


kulandai kannan
அக் 03, 2024 16:30

மறக்காமல் தர்மபுரி எக்ஸ் எம்.பி யைக் கூப்பிடவும்.


saravan
அக் 03, 2024 11:08

பூமி பூஜை ஆமா அந்த பய பெரியாருக்கு மாலை எல்லாம் போட்டான் ... டேய் இது ஆன்மீக பூமி ... பல மதங்கள் இருக்கலாம் அனால் இது ஆன்மீக பூமி ...


M Ramachandran
அக் 03, 2024 10:48

வேறு மாதத்தை சேர்ந்தவர் கள் ஒட்டு பிச்சை எடு பவர்களுக்கு இந்து மத பூஜைய்ய சடங்கு எதற்கு பெரியார் சிலையருகெ அல்லது மலை மூழுங்கி குடும்பாம் சம்மாதியில் சூடம் சாம்பராணி ஏத்தி அஆர்மபிக்க வேலாண்டியது தானெ. அல்லது வட்டிகன் ரெப்ரெசென்ட்டடிவை வைத்து நடத்த வேலாண்டியது தானெ. யேமாத்தாதே யேமாத்தாதே ....


RAMAKRISHNAN NATESAN
அக் 03, 2024 10:26

நாங்க சமாதிக்கே சாப்பிட தயிர்வடையும், படிக்க முரசொலியும் வைக்கிறவங்க ..... தலைவர்கள் படங்களுக்கு ஊதுபத்தி கொளுத்தி பூத்தூவி கும்புடுறவங்க .... இது த வெ க ..... எங்க கிளைக்கழகம் ..... நாங்க வெச்ச ஆளுங்க ..... அவங்க ஏன் சனாதனத்தைப் பின்பற்றிக்கொண்டே திராவிடம் பேசக்கூடாது ????


Barakat Ali
அக் 03, 2024 09:47

திராவிடம், மதச்சார்பின்மை பேசும் கட்சி ஒரு குறிப்பிட்ட மதச்சடங்கை பின்பற்றுவதா ????


Rajarajan
அக் 03, 2024 09:44

இங்கு தமிழகத்தில், அரசியல் கட்சிகள் தொட்டுக் கொள்ள, ராமசாமி ப்ராண்ட் ஊறுகாய் விற்கப்படும். அணுகவும், தமிழக திராவிட அல்லக்கைகள் கழகம் மற்றும் புதிய விநியோகஸ்தர் தலைவர், த.வெ.க. .


chennai sivakumar
அக் 03, 2024 08:26

பூமி பூஜைக்கு அய்யர் வந்தாரா அல்லது பாதிரியார் வந்தாரா அல்லது ரெண்டு பேருமே வந்தனரா? இல்லை சும்மா ஒரு டவுட் தெளிவு படுத்தி க்கொள்ளத்தானே


Kumar Kumzi
அக் 03, 2024 07:26

பூமி பூஜை போடுவது இந்துக்களின் கலாச்சாரம் ஆச்சே மதம் மாறியயர்களுக்கும் பூமி பூஜைக்கும் என்ன சம்பந்தம் இனிமேல் விசய்ன்னா விபூதி குங்குமம் சந்தனம் அணிந்து வேட்டியுடன் உலா வருவார் ஹீஹீஹீ


Samy Chinnathambi
அக் 03, 2024 06:43

இது ஒரு தேவை இல்லாத ஆணி... உதைனாவுடன் பிரச்சினை இருப்பது போன்று ஒரு செட்டப் செய்து , திமுகவுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்க கமல் போன்று உருவாக்கப்பட்ட ஒரு கையாள்..அடுத்த தேர்தலுக்கு சிவகார்த்திகேயனை செட்டப் செய்வார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை