சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. காரைக்குடியில் அதிகபட்சமாக, 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அரியக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை உள்ளது. நேற்று பெய்த கனமழையில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பாதை தண்ணீரில் இறந்த நிலையில் ஒருவரது உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் கனமழை. மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், இன்று (அக்., 12) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம், மில்லி மீட்டரில்: ஈரோடு மாவட்டம்
ஈரோடு- 77,வரட்டு பள்ளம்- 68.8,அம்மாபேட்டை 58.4பவானி 38 மொடக்குறிச்சி 37 தாளப்பாடி 26.4 குண்டேரி பள்ளம் 25.2 சத்தியமங்கலம் 16தர்மபுரி மாவட்டம்
பென்னாகரம் 27.2ஒகேனக்கல் வனப்பகுதி 10.6கரூர் மாவட்டம்
பஞ்சப்பட்டி 39.2மாயனூர் 36.6 பாலவிடுதி 20 தோகைமலை 20 மைலம்பட்டி 18 நாமக்கல் மாவட்டம்
சேந்தமங்கலம் 43 குமாரபாளையம் 38.2 திருச்செங்கோடு 26நாமக்கல் 17 சேலம் மாவட்டம்
எடப்பாடி 64.2 சங்ககிரி 34.4தலைவாசல் 21 நீலகிரி மாவட்டம்
கோடநாடு 52 சாம்ராஜ் எஸ்டேட் 19 திருப்பூர் மாவட்டம்
மடத்துக்குளம் 46 காங்கேயம் 34 வெள்ளகோவில் 27.2 திருமூர்த்தி அணை 26 நல்லதங்காள் ஓடை அணை 25 திருப்பூர் வடக்கு 22 அமராவதி அணை 21 உடுமலை 21 தாராபுரம் 19 உப்பாறு அணை 19குண்டடம் 18சென்னை
ராயபுரம் 26.7 மணலி 23.1 டி வி கே நகர் 20.4 திருவொற்றியூர் 18 பெருங்குடி 17.6கோவை மாவட்டம்
சோலையார் 59 சின்னக்கல்லார் 49 சின்கோனா 42 வாரப்பட்டி 34 மாக்கினாம்பட்டி 32 பெரியநாயக்கன்பாளையம் 29.4 பொள்ளாச்சி 25 வால்பாறை 24 கோவை தெற்கு தாலுக்கா ஆபீஸ் 22சூலூர் 19.4 கிணத்துக்கடவு 18 கன்னியாகுமரி மாவட்டம்
குருந்தன்கோடு 103குளச்சல் 89 இரணியல் 68அடையாமடை 64 திற்பரப்பு 57 தக்கலை 57 முள்ளங்கி விளை 53.2 மாம்பழத்துறையாறு 43 பேச்சிப்பாறை 42.8 நாகர்கோவில் 40 குழித்துறை 32 சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி 154சிவகங்கை 52 சிங்கம்புணரி 33 திருப்பத்தூர் 32தேவகோட்டை 26 திருப்புவனம் 22 தேனி மாவட்டம்
பெரியகுளம் 43சோத்துப்பாறை 32மஞ்சளார் 26 வைகை அணை 21 தூத்துக்குடி மாவட்டம்
கடம்பூர் 68 கயத்தார் 27 விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு 57.6 காரியாபட்டி 52.4 பெரியார் அணை 38.6 ராஜபாளையம் 34 ஸ்ரீவில்லிபுத்தூர் 25.4