உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் கவர்னரை எதிர்த்து தமிழகம் போராடும்: ஸ்டாலின்

மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் கவர்னரை எதிர்த்து தமிழகம் போராடும்: ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் கவர்னருக்கு எதிராக, தமிழகம் போராடும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: 'தமிழகம் யாருடன் போராடும்' என, கவர்னர் ரவி கேட்டுள்ளார். ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டால் தான், கல்வி நிதியை கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும். அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று, மூடநம்பிக்கைகளையும், புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நுாற்றாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும். உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திர கும்பல்கள் தலையெடுக்காமல் இருக்க போராடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும். கவர்னரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று, மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல் சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும். தமிழகத்துக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை, தொழில் வளர்ச்சியை, வேலைவாய்ப்புகளை, மிரட்டி அடுத்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும். ஆர்.எஸ்.எஸ்., ஆசியுடன், இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும். உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல், கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்து போக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும். லோக்சபா தொகுதிகள் மறுவரையறை வாயிலாக, தமிழகத்தின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும். ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும், 'நீட்' எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும். நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழகம் மட்டும், 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று பிற மாநிலங்களுக்கு ஒளி காட்டுகிறதே என்று, நாள்தோறும் அவதுாறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக் கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும். நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழக மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் கவர்னருக்கு எதிராகவும் போராடும். இறுதியில் தமிழகம் வெல்லும்; ஒட்டு மொத்த இந்தியாவையும் காக்கும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

S.V.Srinivasan
நவ 04, 2025 08:05

ஆளுநர் பற்றி, மத்திய அரசு பற்றி, SIR பற்றி குறை சொல்லியே காலத்தை கடத்தி இங்கு இருக்கும் அவலங்களை மடை மாற்றுவதிலேயே குறியாக செயல் படுகிறார்.. டெல்டா மாவட்டங்களில் டன் கணக்கில் நெல் பயிர்கள் மழையில் நினைந்து விவசாயிகள் நஷ்டமடைந்து கண்ணீர் விட்டபொழுது, மரியாதைக்கு கூட அவர்களுக்கு ஆறுதல் கூறவோ, அல்லது அவர்களுடைய நஷ்டத்தை அரசு ஈடு செய்யும் என்று ஒரு வார்த்தை சொல்ல துப்பில்லை. வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைத்து நேரத்தை வீணடிப்பதே பொழப்ப வச்சிருக்கார். 2026இல் மக்கள் சிந்தித்து செயல் பட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.


V RAMASWAMY
அக் 28, 2025 18:38

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அவல நிலை. மிக கேவலம். மக்கள் இதை விரும்பவில்லை.


vijay
அக் 27, 2025 15:48

தமிழகம் எல்லாம் போராடாது அய்யா. நீங்களும், உங்க கட்சி ஆட்களும், 200 ரொவாய் வீரர்களும் போராடுவாங்க. அதுதான் நடக்குது.


வாய்மையே வெல்லும்
அக் 11, 2025 20:18

ஒண்ணுமே தெரியாத வீணாப்போன படிப்பறிவு இல்லாத முதல்வர் வேணாம் என தமிழகம் போராடும்


Parthasarathy Badrinarayanan
அக் 11, 2025 10:54

கவர்னரை அவமதிக்கும் கேவலமான திமுக.


Raj
அக் 11, 2025 06:49

மக்களை மூளைச்சலவை செய்யும் திராவிட கட்சிகளை ஒழித்து கட்டவேண்டும்.


panneer selvam
அக் 10, 2025 17:29

Another bogey raised by Stain ji , One day Stalin ji claims Tamilnadu is the best in every sphere of activities in the world and now he says that Governor is creating chaos . How a single man can disturbance against all powerful Stalin ji . So Stalin ji , please stop these accusations and no one believes even your family members


Nesan
அக் 09, 2025 11:43

மக்களிடையே குடி பழக்கத்தை உண்டாக்கும் முதல்வரை எதிர்த்து தமிழகம் போராடும்: ஸ்டாலின்


mganesan
அக் 07, 2025 15:57

லஞ்சத்தை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. .என்று போராடுங்கள். ஊழலை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். நிலஅபகரிப்ப செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். அடக்குமுறைய செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். திருட்ட செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...என்று போராடுங்கள். கஞ்சா செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...என்று போராடுங்கள். கற்பழிப்பு செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். போதைப் பொருள் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். மது, கள்ளச்சாராயம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். கட்டபஞ்சாயத்து செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். கனிம வளங்கள் கொள்ளை அடிக்க மாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். காவல் துறை அராஜகம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். கடன் வாங்குவதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். போலி விளம்பரம் செய்வதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. திட்டங்களை காப்பி அடிப்பதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...ன்று போராடுங்கள்.... தீண்டாமை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. என்று போராடுங்கள். பொய் பித்தலாட்டம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. என்று போராடுங்கள். அராஜகம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள் தலைவர்களை சிலையை நிறுவ,பொது நிதியை செலவிடுவதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...என்று போராடுங்கள். பள்ளி சீரமைக்க...பள்ளி கட்டிடம் சீரமைக்க....போராடுங்கள். அதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம். இதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம். நீட்டமா list போட்டு சொல்றதுக்கு,... Simpleஆ தீதீதீதீசக்தீதீயதீதீசக்தி ஒழிக்கனும்..ன்னு சொல்லிட்டு போராடுங்கள்....... போராடுவோம்...போராடுவோம்...போராடுவோம்.


S.V.Srinivasan
அக் 07, 2025 15:34

இந்த மாதிரி செய்திகளை படித்து, படித்து அலுத்து போய்டுச்சு. கொஞ்சம் மாத்தி யோசிங்க. ஹி ஹி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை