மேலும் செய்திகள்
ஈரோட்டில் இம்முறை, ம.தி.மு.க., கொடி பறக்குமா?
30-Jun-2025
சென்னை: 'தி.மு.க.,வின் தோல்வி வரலாற்றை தமிழகம் மறக்காது' என, அ,தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் எங்கு இருந்தாலும், அவரது எண்ணம் முழுக்க, என் எழுச்சிப் பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். 'உங்களுடன் ஸ்டாலின்'ன்னு பிரமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறார்.ஆனால், ஜெயலலிதாவின் திட்டத்தை, 'காப்பி' அடித்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன். இதுதான் ஸ்டாலின் விரும்பும் விளம்பரமா? சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்திற்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டுறீங்களே என்று கேட்டதற்கு, ஸ்டாலினின் பதில் என்ன? ஊர் ஊராக கருப்பு பெட்டி துாக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுச்சீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று, அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?பத்து தோல்வி என்று என்னை பார்த்து சொல்லும் முன்னர், உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா? 2011 சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2013ல் ஏற்காடு இடைத்தேர்தல், 2014ல் லோக்சபா தேர்தல், 2015ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், 2016ல் சட்டசபை தேர்தல், 2017ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என, தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., படுதோல்வி அடைந்ததே, இதை மறந்து விட்டு என்னை பார்த்து கேள்வி கேட்கலாமா?நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. மக்கள் சொல்லும் 'பை பை ஸ்டாலின்' அவரை கதற விடுகிறது. அதனால், 234 தொகுதிகளில் அதைச் சொல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
30-Jun-2025