உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகத்தின் வளர்ச்சி; உதயநிதி பெருமிதம்

இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகத்தின் வளர்ச்சி; உதயநிதி பெருமிதம்

கோவை: கோவையில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை துணை முதல்வர் உதயநிதி நாட்டினார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு தி.மு.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.,புரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூ.239.41 கோடி மதிப்பில் 25,024 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; கோவைக்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும். எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. நாட்டுக்கே முன்னோடியாக தமிழகத்தின் வளர்ச்சி 9.6ஆக இருக்கிறது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

panneer selvam
ஏப் 27, 2025 22:51

Udaynidhi ji, stop bluffing. Tamilnadu is trailing behind 5 states including UP and Karnataka. Just compare GST collection which confirms economy activities of the state. Tamilnadu is much ahead of other states on human index other than Kerela due to its advanced education and health segments. That is not just because of DMK , other have more contributed especially Kamaraj and second term of MGR .


Matt P
ஏப் 27, 2025 22:35

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது கோவைக்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.


Gurumurthy Kalyanaraman
ஏப் 27, 2025 22:04

தலைவா. இந்த வளர்ச்சி நம்ம அரசு உண்டாக்கினது இல்லை. தனியார் துரையின் உழைப்பாலும் அவ்ரகளிடம் வேலை செய்யும் தொழிலாளரகளின் வியர்வயாலும் உண்டானது. இதையும் கொஞ்சம் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும். நமக்கும் உண்மை பேசுவதுக்கும்தான் ரொம்ப தூரமாச்சே. அதனாலே விடுங்க. போகட்டும்.


Ramesh Sargam
ஏப் 27, 2025 20:02

அந்த ஹாக்கி மைதானத்திற்கு கட்டாயம் கலைஞர் கருணாநிதி ஹாக்கி மையம் என்று பெயரிடுவார்கள்.


முக்கிய வீடியோ