மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
3 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
4 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
4 hour(s) ago | 2
மதுரை: தமிழகத்தில் இரு நாட்களுக்கு முன் நடந்த போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், தமிழ் கேள்விகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால், தமிழ் வழியில் படித்தவர்களின் எஸ்.ஐ., கனவு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, டிச., 21ம் தேதியில், 1,299 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. தேர்வாணையத்தின் வலைதளத்தில், தேர்வுக்கு தயாராகும் வகையில், முன்பே எதன் அடிப் படையில் கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மொத்த கேள்விகள் 140. அதில் பகுதி 'ஏ' பிரிவில், 80 கேள்விகள் பொது அறிவும், பகுதி 'பி' பிரிவில், 10 ஆங்கிலம், 10 தமிழ், 40 கணிதம், உளவியல் கேள்விகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே மாதிரி கேள்வித்தாள்களும் இருந்தன. ஆனால் டிச., 21ல் நடந்த தேர்வில் பொதுத் தமிழுக்கான, 10 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டன. தேர்வு மையத்தில் பலரும் கேள்வித்தாளை பார்த்ததும் 'வினாத்தாள் மாற்றி கொடுத்து விட்டார்களோ' என குழப்பம் அடைந்தனர். பொது தமிழுக்கு நேரம் ஒதுக்கி படித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
அவர்கள் கூறியதாவது:
எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என பெருமை பேசும் தி.மு.க., அரசு, தமிழில் இருந்து கேட்கப்படும், 10 கேள்விகளை நீக்கியதால், மதிப்பெண் குறைந்து எங்களின் எஸ்.ஐ., கனவு கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். வெளிப்படையான அநீதி தமிழ் மொழியின் பெயரால் நாடகமாடும் தி.மு.க., அரசு, எஸ்.ஐ., தேர்வில் தமிழை புறக்கணித்திருப்பது, அவர்களது தமிழ் பற்றை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இது, தமிழ்வழி மாணவர்களுக்கு தி.மு.க., செய்த வெளிப்படையான அநீதி. தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க, இந்த தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். - அண்ணாமலை முன்னாள் தலைவர் தமிழக பா.ஜ.,
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago | 2