உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ''பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சட்டசபையில் 110 விதிகளின் கீழ், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எளிமையான சொற்கள் மூலம் வலிமையான கருத்துகளை சொன்னவர் பாரதிதாசன். பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும். அரசு சார்பில் இலக்கிய கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பள்ளிக் கூடங்களில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். செந்தமிழை பரப்ப இந்த விழா பயன்படும். பாரதிதாசன் புகழை கொண்டாடும் விழாவில் அனைவரும் பங்கேற்று தமிழின் புகழை உயர்த்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
ஏப் 22, 2025 13:24

ஏன் இதேபோன்று அவருக்கு ஆசானாகிய பாரதிக்கு எப்போதாவது எங்காவது இது போன்ற வார விழா கொண்டாடியது உண்டா இல்லை இனிதான் கொண்டாட போகிறார்களா இரண்டுமே இல்லை இல்லை இல்லை ஏனென்றுதான் தெரியவில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 14:12

பாரதி என்ன சாதிக்காரர்? அதுதான் காரணம்.


Matt P
ஏப் 22, 2025 20:26

கருணாநிதி பாரதியை சாதிக்காரர் என்றெல்லாம் பார்த்தாக தெரியவில்லை. அவர் கதை வசனம் எழுதிய பல படங்களில் பாரதி பாடல்கள் இருக்கும். கருணாநிதிக்கு சாதிக்கார நண்பர்கள் அதிகம். தமிழாய்ந்த தமிழ் மகன் தான் தமிழ்நாட்டின் தலைமகனாக வர வேண்டும் என எழுதினஆர் பாரதிதாசன். சாப்லின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் நூல்கள் படிக்கலாம் டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 12:44

அதில் ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் செந்தமிழ் உரையும், ஒருநாள் ஐசக் லியோனியின் உரையும், ஒரு நாள் அமைச்சர் பொன்முடியாரின் சிறப்புரையும், ஒரு நாள் கவிஞர் வைரமுத்துவின் அப்பாவுக்கு புகழுரையும் இடம்பெறவேண்டும்.


V.Ravichandran
ஏப் 22, 2025 12:32

அருமையான கட்சி, கொண்டாட்டம் தவிர ஒன்னும் கிடையாது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை