உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆண்டாள் கோலத்தில் திமுக எம்.பி., தமிழச்சி போஸ் கொடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.திமுக எம்பியான தமிழச்சி தங்கப்பாண்டியன் தென்சென்னை தொகுதியில் 2019 முதல் எம்பியாக இருந்து வருகிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இலக்கியம் மீது ஆர்வம் கொண்டதுடன், கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். திமுகவின் கொள்கைகளை பரப்பியும், அதற்கு ஆதரவாக வாதங்களை முன் வைத்தும் பொதுக்கூட்டங்களிலும், பார்லிமென்டிலும் பேசக்கூடியவர்.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசை பாஜ, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்டாள் வேடத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அத்துடன், 'அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!' என்ற திருப்பாவை பாடலையும் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜ பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி வெளியிட்ட அறிக்கையில், ' தமிழச்சியின் ஆண்டாள் வேடம். இதை நான் எதிர்பார்க்கவில்லை. வரவேற்கிறேன். தமிழச்சி போல திமுகவில் மற்றோரும் சனாதன வெறுப்பை கைவிட்டு தமிழுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் தொண்டாற்றியவர்கள் வரலாற்றை போற்றுவார்களா?' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Dhanasekar Natarajan
டிச 18, 2025 14:30

DMK தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடவுள் எதிர்ப்பாளர்கள் இல்லை, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சனாதானத்திற்க்கு மட்டுமே எதிர்ப்பாளர்கள் கடவுள்களையும் மக்களையும் பழிப்பதும் ஏமாற்றுவதும் மத தலைவர்கள் மட்டுமே


Prabu
டிச 17, 2025 12:18

ஆண்டாள் நாச்சியாரை கொச்சை படுத்துகிறார்


sivaram
டிச 17, 2025 12:10

குத்து குத்து வாக்கு சீட்டிலே நல்லா குத்து நீங்க என்ன வேண்டும் என்றாலும் சொல்லி காட்டுங்கள் ஆனால் எங்கள் சின்னத்தில் வாக்கை குத்துங்கள் நல்லா அழுத்தமா கை விடாதீர்கள்


kulanthai kannan
டிச 17, 2025 11:16

வெட்கம்கெட்ட திராவிட .....


தமிழ்செல்வி
டிச 17, 2025 10:55

...னுடைய ஆண்டாள் வேடம்


theruvasagan
டிச 17, 2025 09:31

அடுத்த வேஷம் சான்டா கிளாஸ். கிருஸ்துமஸ் வருதில்ல. போலி மதச்சார்பின்மைக்கு தீட்டு பட்டுடக் கூடாதுல்ல. தென்னை மரத்துல ஒரு குத்து. ஏணி சின்னத்துல ஒரு குத்து.


vbs manian
டிச 17, 2025 08:41

சூடி கொடுத்த சுடர் மங்கை மன்னிக்கட்டும்.


vbs manian
டிச 17, 2025 08:40

முன்பு முருகன் வேஷம் இப்போது ஆண்டாள் வேஷம். ஹிந்து கடவுள்கள் இவர்களுக்கு விளையாட்டு பொழுது போக்கு விஷயங்கள் ஆகிவிட்டன. அந்த ஆண்டாளின் பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் உண்டா. கொச்சைப்படுத்தாதீர்கள்.


Kasimani Baskaran
டிச 17, 2025 05:38

ஒரு பக்கம் எங்கள் தாய் ஆண்டாளை அவமதித்த தகரமுத்துவை அரவணைத்து அருகில் வைத்துக் வைத்துக்கொண்டு அடுத்த பக்கம் தீம்க்கா எம்பிக்கு ஆண்டாள் வேடமிட்டு மார்கழி ஒன்றுக்கு வாழ்த்து சொல்வது போல நாடகம் போட்டாலும் கூட உண்மையான இந்துக்கள் ஒரு பொழுதும் தீம்க்கா என்கிற தீய சக்தியை நம்ப மாட்டார்கள். கூடுதலாக கார்த்திகை தீபமேற்றவிடாமல் தடுக்க போடப்பட்ட நாடகங்களை பொதுமக்கள் கூட ரசிக்கவில்லை.


Bhaskaran
டிச 17, 2025 05:31

ஆண்டாள் இளம்வயதிலேயை அரங்கனுடன் ஐக்கியமானார் இந்த அம்மா பாட்டி எப்படியும் 3 மணிநேரம் டிரிங்கரிங் பெயிண்டிங் பண்ணியிருக்காங்க


சமீபத்திய செய்தி