உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிட்டாபட்டியில் வேதாந்தா நிறுவன சுரங்கம்! அவசரமாக விளக்கம் அளித்த தமிழக அரசு

அரிட்டாபட்டியில் வேதாந்தா நிறுவன சுரங்கம்! அவசரமாக விளக்கம் அளித்த தமிழக அரசு

சென்னை; அரிட்டாபட்டியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி கிராமம் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன. அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாக தெரிகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kd49yg8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறி உள்ளதாவது: மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை. மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டு உள்ள பகுதி எது? எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ