சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 59% கூடுதலாகப் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்று (ஆகஸ்ட்6) வரை சராசரியாக 211 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட 59% கூடுதலாகப் பெய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5szo2mux&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாவட்டம் வாரியாக மழை விபரம் (மி.மீ.,)
* நீலகிரி 1003.9* கோவை 748* ராணிப்பேட்டை 429* சென்னை 411.7* திருவள்ளூர் 411.7* காஞ்சிபுரம் 408.2* செங்கல்பட்டு 337.4* கன்னியாகுமரி 326.6* வேலூர் 300.7* திருவண்ணாமலை 262.211 மாவட்டங்களில் கனமழை கொட்டும்!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.