மேலும் செய்திகள்
சிக்கண்ணா மாணவர்கள் மாநில பயிலரங்கில் பங்கேற்பு
28-Aug-2025
பள்ளியில் என்.எஸ்.எஸ்., மன்றம் துவக்க விழா
23-Aug-2025
சென்னை:'என்.எஸ்.எஸ்., எனும் நாட்டு நலப் பணிகள் திட்டத்தை, அனைத்து பல்கலை, கல்லுாரிகளும் செயல்படுத்த வேண்டும்' என, யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது. அனைத்து பல்கலை துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, எழுதியுள்ள கடிதம்: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையால், 1969ம் ஆண்டு, என்.எஸ்.எஸ்., எனும் நாட்டு நலப் பணிகள் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டம், சமூக சேவை, தலைமை பண்பு, சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றில், இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. மேலும், நாட்டுக்கான சேவை அர்ப்பணிப்பு உணர்வையும் வளர்க்கிறது. தற்போது, நாடு முழுதும், 39 லட்சம் மாணவ, மாணவியர், என்.எஸ்.எஸ்., அமைப்புகளில் இணைந்து, தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் தற்போது, 2025 - 26ம் ஆண்டில் கூடுதலாக, 25 லட்சம் மாணவ, மாணவியரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும், 594 பல்கலைகளில் என்.எஸ்.எஸ்., பிரிவுகள் இயங்கி வருகின்றன. என்.எஸ்.எஸ்., பிரிவுகள் இல்லாத பல்கலை மற்றும் கல்லுாரிகள், அவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-Aug-2025
23-Aug-2025