உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.15, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு! கள்ளத்தனமாக விற்றால் நடவடிக்கை

ஜன.15, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு! கள்ளத்தனமாக விற்றால் நடவடிக்கை

சென்னை; ஜன.15, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் குடிமகன்கள் கூட்டம் நிரம்பி வழியும். தொடர் விடுமுறை என்பதால் வியாபாரமும் களைகட்டும். நாள்தோறும் ரூ.100 கோடியும், பண்டிகை காலங்களில் கிட்டத்தட்ட ரூ.200 கோடியும் வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், டாஸ்மாக்கில் ஜரூர் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், வரும் (ஜன.) 15 மற்றும் 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் தினத்துக்கு அடுத்த நாளான ஜன.15ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதேபோல ஜன.26ம் தேதி குடியரசு தினம் என்பதால் அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்கக்கூடாது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Puratchi Thondan
ஜன 10, 2025 23:39

நினைவூட்டல் மாதிரி இருக்கிறது, வாங்கி வைத்துக்கொள்ளவும்.


Ramesh Sargam
ஜன 10, 2025 22:19

கள்ளத்தனமாக விற்பனை இருக்காதுங்களாங்கோ... நம்பிட்டோம்ங்க...


புதிய வீடியோ