உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு

சென்னை:''டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 64 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்,'' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரை கண்டறிந்து, விரைவான சட்ட நடவடிக்கைகள் எடுக்க, குற்றப் புலனாய்வு துறை பயன்பாட்டிற்கு, 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வழங்கப்படும் போதைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில், சிறப்பாக பணியாற்றியதற்கு, தமிழக முதல்வர் காவலர் பதக்கம் என்ற சிறப்பு பதக்கம் உருவாக்கப்பட்டு, அதனுடன் அன்பளிப்புத் தொகையாக, 50,000 ரூபாய், 2023 முதல் ஐந்து காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இது, இந்த ஆண்டு முதல் 15 பேருக்கு வழங்கப்படும்கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ள மது விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு, சிறை தண்டனை பெற்று விடுதலையாகி, மனம் திருந்தியவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க, சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த, தலா ஒருவருக்கு, 50,000 ரூபாய் மானியமாக வழங்க, 5 கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும்டாஸ்மாக் கடைகளில், 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள், 2,426 உதவி விற்பனையாளர்கள் என, மொத்தம், 23,629 பேர் தொகுப்பூதிய முறையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியத்துடன், இம்மாதம், 1ம் தேதி முதல் மாதந்தோறும், தலா 2,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 64.08 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

'டாஸ்மாக்' வாயிலாக ரூ.48,344 கோடி வருவாய்

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,784 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. அந்த கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்புக் கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. கடந்த, 2024 - 25ல் ஆயத்தீர்வை மற்றும் மதிப்புக் கூட்டு வரி வாயிலாக, 48,344 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டைவிட, 2,488 கோடி ரூபாய் அதிகம். ஆண்டு வாரியாக வருவாய் விபரம்:ஆண்டு - ஆயத்தீர்வை - மதிப்புக் கூட்டு வரி - மொத்தம்(ரூபாய் கோடியில்)2021/ 22 - 8,236.60 - 27,814.05 - 36,050.652022/ 23 - 10,422.47 - 33,698.66 - 44,121.132023/ 24 - 10,774.28 - 35,081.42 - 45,855.702024/ 25 - 11,020.43 - 37,323.57 - 48,344


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ