உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழியர்கள் ஜூலை 9ல் வேலை நிறுத்தம்

டாஸ்மாக் ஊழியர்கள் ஜூலை 9ல் வேலை நிறுத்தம்

சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' மது கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஜூலை 9ல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது:மத்திய தொழிற்சங்கங்கள், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 9ல் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றன. டாஸ்மாக் கடைகளில், 2003 முதல், 30,000 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்வது, பதவி உயர்வு வழங்குவது, ஓய்வுபெறும் வயதை, 60 ஆக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்களும் அந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக, டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு முறைப்படி அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை