வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எந்த மாநிலத்தில்குடிகாரன்களால் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்கிறது?
இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் நேரிடும் மாநிலமாக, தமிழகம் மாறி இருப்பது, பார்லிமென்டில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. தரமற்ற, சீர் குலைந்த சாலைகள், ஒரு காரணமாக இருந்தாலும், தன் கட்சியினர் பணம் சம்பாதிப்பதற்காக, தெருவுக்கு தெரு 'டாஸ்மாக்' மதுக் கடைகளை திறந்து வைத்திருக்கும், தி.மு.க., அரசின் அலட்சிய போக்கே, இதற்கு முக்கிய காரணம். கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையால் ஏற்படும், சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்களே. ஆனால், தி.மு.க., அரசுக்கு, மது விற்பனை வாயிலாக கிடைக்கும் பணமே, முக்கியமாக தெரிகிறது. போதைப் பொருள் விற்பனையை தடுக்கவோ, சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவோ, இயலாத, கையாலாகாத தி.மு.க., அரசு, விரைவில் துாக்கி எறியப்படும். - அண்ணாமலை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,
எந்த மாநிலத்தில்குடிகாரன்களால் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்கிறது?