உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கொள்ளை அடிக்க டாஸ்மாக்: அண்ணாமலை

தி.மு.க., கொள்ளை அடிக்க டாஸ்மாக்: அண்ணாமலை

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:தமிழக அரசு நடத்தும், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் ஒரே நோக்கம், மக்கள் மதுபோதையில் இருப்பதை உறுதி செய்வதுடன், தி.மு.க.,வினர் லாபம் ஈட்டுவதை உறுதி செய்வதுதான். சட்ட விரோத மதுக்கூடங்கள், மது விற்பனை கடையில் இருந்து, கணக்கில் வராத பணம், தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவில் சேருகின்றன. மதுக்கூட உரிமையாளர் ஒருவர், டாஸ்மாக்கில் உள்ள ஒவ்வொரு அதிகாரியாலும் கொடுமைப்படுத்தப்பட்டு, அழுத்தத்தை தாங்க முடியாமல், தன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், ஏழைகளிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்திவிட்டு, மாநில முதல்வராக செயல்படும் முன், தி.மு.க., அரசு இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப் போகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Palanisamy Narayanasamy
மே 23, 2025 17:19

எச்ச ராஜா மாதிரி, இப்படித்தான் எப்போதாவது ஒருமுறை கூவனும்.... இப்போ வசூல் எல்லாம் எப்படி...?


Marai Nayagan
மே 23, 2025 13:52

அண்ணாமலை மட்டுமே திருட்டு திமுக டாஸ்மாக் மாடல் கொள்ளை கூட்டம் எப்படி தமிழக குடும்பங்களின் இலவசம் கொடுத்து ஏமாற்றி மக்களை முட்டாளாக வைத்துள்ளது என்பதை தெளிவாக தீரத்துடன் எடுத்து கூறி வருகிறார். ஆனால் சில அல்லகைகள் திமுக சில்லறைப் பெற்று அவரை துற்றி வருவது ஒரு ஈன செயல் அன்றி வேறில்லை


Jyothi Kanakarayan
மே 23, 2025 12:37

நீங்கள் எவ்வளவு தான் அறிக்கை வெளியிடுங்கள். உங்களுக்கு வாக்கு வங்கி இல்லை.


Anbuselvan
மே 23, 2025 11:47

கனிம வளங்களை மறந்து விட்டார் போலும்


Marai Nayagan
மே 23, 2025 13:56

உங்கள் திமுக திருடாத துறை ஏது?


Mario
மே 23, 2025 09:23

மழை அதிகம் உள்ளதால் கொசு தொல்லை மீண்டும் தொடங்கிவிட்டது


Marai Nayagan
மே 23, 2025 13:58

காசுக்கு மதம் மாறிய சிலர் திமுகவுக்கு மூட்டு கொடுத்து அற்ப வாழ்வு வாழ்வதும் அசிங்கம்...நீங்கள் எப்படி?


Mecca Shivan
மே 23, 2025 06:28

அந்த இரண்டு தம்பிகளும் தப்பிக்க நீங்களோ அல்லது அந்த ஜியோ உதவியதை கம்யூனிஸ்ட் பத்திரிகைலயார்கள் நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் சொல்லிக்கிண்டு இருக்கிறார்கள் ..உங்கள் பதில் என்ன அண்ணாமலை ? கடந்த இரண்டு மாதமாக நீங்கள் திமுகவிற்கு சாதகமாக வேலை செய்வதகவும் அந்த ஜீ பிஜேபி பெயரை வைத்து பல கோடிகளை சம்பதிவிட்டதாகவும் சவுக்கு கூட சொல்கிறான்


முக்கிய வீடியோ