உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜில் பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை

ஜில் பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பத்தை தணிக்க, வாடிக்கையாளர்கள் மது வகைகளுக்கு பதிலாக, பீர் பாட்டில்களை அதிகம் வாங்குகின்றனர். இதனால், தினமும் சராசரியாக, 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, ஒரு லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, கடை ஊழியர்கள், குளிர்ச்சியான பீர் பாட்டிலுக்கு, 20 - 30 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, டாஸ்மாக் பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:

மதுக் கடைகளில் குளிர்ச்சியான பீர் வழங்க, 'கூலர்'கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கடைகளுக்கான மின் கட்டணத்தையும், நிர்வாகமே வழங்குகிறது. எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு பீர் விற்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது, இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

LK Designers karur
ஏப் 16, 2025 11:00

கேனப்பையன் ஊர்ல கிருக்குப்பையன் நாட்டடாமை


அப்பாவி
ஏப் 15, 2025 09:46

குடிகாரர்கள் திரண்டெழுந்து அதிகமா துட்டு வாங்கற கடைகளை என்ன செய்யலாம்னு தீர்மானிக்கணும். உங்களை சுரண்டிப் பிழைக்கும் அரசை எப்போ டிஸ்மிஸ் பண்ணப் போறீங்க?


Udayasuryan
ஏப் 15, 2025 08:31

கள்ளு கடை சாராய கடை திறந்தால்தான் இந்த டாஸ்மாக் ஊழியர்கள் சரிபடும் இல்லையெனில் இவர்கள் ரூ 10 வசூல் செய்து கொண்டிருப்பார்கள் இந்த பணம் அரசியல்வாதிகளும் இவர்களும் பங்கு போட்டு கொள்கின்றனர். டாஸ்மாக்கை மூடி தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசாங்கமே இதில் முக்கால பங்கு உள்ளது. இதை கேட்க ஆள் இல்லை இவர்கள் வைத்ததுதான் சட்டம். மக்களுக்கு துரோகம் செய்யும் அரசை தூக்கியெறியும் மக்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.


D Natarajan
ஏப் 15, 2025 08:08

10 ரூபாய்க்கு சாமான் வாங்கினாலும் பில் கொடுப்பரகள். ஆனால் டாஸ்மாக்கில் 40000 ஆயிரம் கோடி வருமானம் ஆனால் பில் கிடையாது. உலக அநியாயம் ஆடிட் இல்லை. எங்கேயாவது இந்த மாதுரி பிசினஸ் கடை உண்டா .


Mani . V
ஏப் 15, 2025 05:31

கொள்ளையர்கள் கிழிந்த ஜீன்ஸ், தொப்பி என்று இல்லாமல் இப்பொழுதெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் திரிகிறார்கள்.


Kasimani Baskaran
ஏப் 15, 2025 03:54

அதிகம் வசூலித்தால் இடமாற்றம் மட்டும்தான் - ஆகவே கவலை வேண்டாம். மாடலின் மகிமை பாரீர்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை