உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் நடந்தது வரி உயர்த்தி சாதனை!: பழனிசாமி

தி.மு.க., ஆட்சியில் நடந்தது வரி உயர்த்தி சாதனை!: பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நீலகிரி : ''தமிழகத்தில் 100 சதவீதம் வரியை உயர்த்தியது தான், தி.மு.க., ஆட்சியில் நடந்த சாதனை. ஆனால், 'ரோல் மாடல் ஆட்சி' என, துணை முதல்வர் உதயநிதி பெருமைப்பட்டு கொள்கிறார். ஊழல் செய்வதில், பொய்யான வாக்குறுதி அளிப்பதில் தான், இந்த ஆட்சி ரோல் மாடலாக உள்ளது,'' என, நீலகிரியில் நடந்த பிரசாரத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார். 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரப் பயணத்தை, மாநிலம் முழுதும் பழனிசாமி மேற்கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார பயணத்தில், பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் 16 மருத்துவக் கல்லுாரிகள், 67 அரசு கலைக் கல்லுாரிகள், 21 பாலிடெக்னிக்குகள் துவங்கப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், ஒரு மருத்துவக் கல்லுாரி கூட துவங்கவில்லை. ஸ்டாலின் ஆட்சியை, 'ரோல் மாடல் ஆட்சி' என்று துணை முதல்வர் உதயநிதி பெருமையாக பேசி வருகிறார். கடன் வாங்குவதில், ஊழல் செய்வதில், குடும்ப வாரிசு அரசியல் செய்வதில், பொய்யான வாக்குறுதி அளிப்பதில், இவர்கள் ரோல் மாடலாக உள்ளனர். 10 கோடி மக்களின் உழைப்பை, ஒரு குடும்பம் சுரண்டுகிறது; இதை இனியும் மக்கள் அனுமதிக்க கூடாது. ஒட்டு போட்ட சட்டை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பல கட்சியில் இருந்து வந்தவர். பிச்சைக்காரர்கள் ஒட்டு போட்ட சட்டை போட்டிருப்பர்; அதுபோல் பல கட்சிக்கு போயிருக்கிறார். எந்த கட்சிக்கு போகிறாரோ, அந்த கட்சியின் கொள்கையை கடைப் பிடிக்கிறார். அந்த கட்சியை அவர் வளர்க்க பார்க்கவில்லை. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அழகிரியும் ஒரு கருத்தை சொல்கின்றனர். ஆனால், செல்வப் பெருந்தகை, 'ராகுலே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; நீங்களும் கேட்காதீர்' என்கிறார். உண்மையிலே காங்கிரஸ் கட்சி தொண்டராக இருந்தால், கட்சி மீது பற்று இருந்தால், இப்படி பேசும் எண்ணம் வந்திருக்காது. காங்கிரஸ் கட்சிக்கு, அவர் விசுவாசமாக இல்லை; தி.மு.க.,வுக்கு விசுவாசமாக இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்று கோஷத்தை எழுப்பி விட்டனர். தி.மு.க., கூட்டணியில் பிளவு ஆரம்பமாகி விட்டது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, கூட்டணியை நம்பியில்லை; மக்களை நம்பியிருக்கிறது. அடிமைகள் தி.மு.க.,வோ கூட்டணியை நம்பியிருக்கிறது. தி.மு.க.,வில், கூட்டணி கட்சிகள் அடிமைகளாக உள்ளன. அ.தி.மு.க., யாருக்கும் அடிமையாக இருக்காது; கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்தாது. விலைவாசி விண்ணை முட்டி விட்டது. ஏழை மக்களை வேதனையில் இருந்து காக்க, விலைவாசியை கட்டுப்படுத்த, தி.மு.க., அரசு முயலவில்லை. ஆட்சிக்கு வரும் முன், 'சொத்து வரியை உயர்த்த மாட்டோம்' என்றனர். குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி என எல்லா வரிகளையும், 100 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி விட்டனர். போதாக் குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு, தி.மு.க., அரசு தான். இது தான் தி.மு.க., ஆட்சியில் நடந்த சாதனை; வேறு எதுவும் இல்லை. கடந்த 52 மாத தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Oviya Vijay
செப் 25, 2025 20:13

இவருக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடு்க்க வேண்டியதில்லை ... தேர்தல் முடிந்ததும் இவர் ஒரு செல்லாக்காசு... கதம் கதம்...


அயோக்கிய திருட்டு திராவிடன்
செப் 25, 2025 16:10

இவ்வளவு கூட்டம் கூடுவதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை இன்னொரு திருட்டு திராவிடம் அழிவதற்காக இவருக்கு ஓட்டு போடுவதில் தப்பில்லை


Appan
செப் 25, 2025 10:08

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற செலவடை தமிழில் உள்ளது. அதாவது சிந்தனை திறன் இருந்தால் தான் நாட்டின் வளர்சியை பற்றி பேச முடியும் ..இந்த அடிவருடிகள் நாட்டை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் கொள்ளை அடித்து பெரும் செல்வந்தர்கள் ஆனார்கள். ஓபிஎஸ், இபிஸ் ,சசிகலா, தினகரன், வேலுமணி ...இவர்களின் திறமை என்ன என்று யாரவது சொல்ல முடியுமா ..? எப்படி இவர்களுக்கு இவ்வளவு செல்வம் வந்தது ..60.. களில் தமிழகத்தில் சமூக மறுமலற்சி வந்து , இப்போ ஒரு வளர்ந்த மாநிலமாக உள்ளது. ஓட்டு மொத்த இந்தியாவுக்கெ வழிகாட்டியாக உள்ளது. . இப்போ மற்றுமொரு சிந்தனை வர வேண்டும். அது ஊழலை வேரோடு ஒழிப்பது ..இந்த ஊழல் பெருச்சாளிகளை ஆட்சிக்கு வராமல் செய்யணும். அப்போ தான் தமிழக வளரும்.


R.PERUMALRAJA
செப் 25, 2025 10:06

எந்தெந்த பிரச்னை எந்தந்த emotions உண்டாக்கும் என்று தெரிந்து கொள்வது அரசியல்வாதிகளுக்கு சிறந்தது , psychological அட்டாக் உட்பட, "ஏழைகளின் கிட்னி அறிவாலய money" "கிட்னி திருடர்கள் வருகிறார்கள்", "இட்லிக்கு கிட்னி" "ஏழை மக்களின் கிட்னி", "அன்றாட காட்சியாளர்கிளின் கிட்னி" "நெசவாளர்களின் கிட்னி அறிவாலய money" என்று கூப்பாடு போட்டு, தெருவோரம் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வதும் சிறந்தது. கிட்னி பிரச்னை தொடர்பில் உள்ள மருத்துவமனை மீது இன்று வரை F.I.R போடவில்லை என்று பிரச்சாரம் செய்வதும் சிறந்தது , எந்தந்த பிரச்னை எந்த நேரத்தில் கிளப்புவது , எப்படி கிளப்பிவிடுவது , மக்களின் உணர்ச்சிகளை எப்படி உசுப்பிவிடுவது என்பதும் ஒரு கலையே வரிஉயர்த்திய பிரச்சையை இன்று எடப்பாடி கிளப்புகிறார் . அறுவடைக்கு வந்த நெல்மணியை உடனே அறுப்பது சிறந்தது வருடங்கள் கடந்து அறுவடை செய்வது அழகல்ல .


சாமானியன்
செப் 25, 2025 08:24

மாண்புமிகு பழனிசாமி அவர்களே! திமுகவினர் 1000₹ கொள்ளையடித்தால் அதிமுகவினர் 100₹ கொள்ளையடிக்கிறார்கள். விலைவாசி, வரி இவைகள் உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.


Barakat Ali
செப் 25, 2025 07:52

எப்படியெல்லாம் மக்களை வஞ்சித்தது என்று பட்டியலிட்டுப் பேசாமல் இப்படிப் பேசுவதால் பயனில்லை.. உங்களுக்கு பிரச்சாரத் திட்டத்தை வகுத்துக்கொடுப்பது அறிவாலய ஆள்தானா ????


Kasimani Baskaran
செப் 25, 2025 03:47

மின்கட்டணக்கொள்ளை மற்றும் பத்திரப்பதிவுக்கட்டணக்கொள்ளை போன்றவை தீம்க்காவினர்களுக்கு இன்பகரமான செய்தி.


சமீபத்திய செய்தி