உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் நாளை முதல் டீ விலை ரூ.15; டீ பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் நாளை முதல் டீ விலை ரூ.15; டீ பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னை: மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.சென்னையில் நாளை (செப் 01) முதல் டீ, காபி விலை உயர்கிறது என டீக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பால், காபித் தூள், டீ தூள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.ரூ.10, ரூ.12க்கு விற்கப்படும் வரும் டீ விலை நாளை (செப் 01) முதல் ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. ரூ.15க்கு விற்கப்பட்டு வரும் காபி விலை நாளை முதல் ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்று அறவிக்கப்பட்டதால் டீ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே சில ஆண்டுகளாக ரூ.15க்கு கோவையில் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivagiri
ஆக 31, 2025 19:10

கூட ரெண்டு ரூபா வாங்கிக்கோங்கப்பா . . . டம்பளரை நல்லா கழுவி போடுங்கப்பா . . . டீ கிளாஸை வாய் கிட்ட கொண்டு போனாலே , பாண் பராக் , பீடி , புகையிலை நாத்தம் , உதட்டில் வைத்தவுடன் , அரிக்க ஆரம்பிச்சிருது . . . பெங்களூரில் பெரும்பாலும் , டீ கிளாஸ்களை கழுவி , கவிழ்த்து அடுக்கி வைக்கும் போதே அந்த டிரேவில் சுடுதண்ணி ஊற்றி வைத்திருக்கிறார்கள் , இதனால் தனியாக சுடுதண்ணி ஊற்றி கழுவ வேண்டியதில்லை , ஓரளவுக்கு , சுகாதாரமா நாத்தம் அடிக்காம இருக்கிறது . . .


chennai sivakumar
ஆக 31, 2025 18:45

உன்னை சொல்லி குற்றம் இல்லை. காலம் செய்த கோலமடி. விலைவாசி செய்த குற்றமடி


ديفيد رافائيل
ஆக 31, 2025 17:06

Coimbatore ல் கடந்த இரண்டு வருடங்களாக 15 rupees tea price.


Sappanidurai Durai
ஆக 31, 2025 15:41

திருப்பூரில் விலையே ஏறி ஒரு வருடம் ஆகிறது 15


ahmed
ஆக 31, 2025 15:11

milk, teadust, sugar, gas, shop rent, labour salary, electricity rent, utensils including damages, water bill, other miscelleneous expenses while forced to bribe to have smooth sailing of business


Manaimaran
ஆக 31, 2025 14:12

ஒரு டீக்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?


சமீபத்திய செய்தி