உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசாணை 243ஐ ரத்து செய்ய ஆசிரியர்கள் அமைப்பு மனு

அரசாணை 243ஐ ரத்து செய்ய ஆசிரியர்கள் அமைப்பு மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணையை ரத்து செய்யும்படி, 'டிட்டோஜாக்' சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழுவான, 'டிட்டோஜாக்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமையில், 15 பேர், தொடக்கப் பள்ளிகள் துறை இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:மாவட்டங்களுக்குள் உள்ள ஒன்றியங்களுக்குள் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் வகையில், அரசாணை 243 வெளியிடப்பட்டது. பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் ஆசிரியர்களே பணியாற்றும் நிலையில், பதவி உயர்வுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டியுள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் வயது மூப்படையும் போது வரும் இந்த பதவி உயர்வால், குடும்பம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதைக் கருதி பலர் பதவி உயர்வை தவிர்க்கும் நிலை உள்ளது. அதனால் இதை திரும்ப பெற்று, பழையபடியே ஒன்றியத்துக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jay
டிச 20, 2024 09:24

அரசுக்கு வருகின்ற வருமானத்தில் 90% அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும் டென்ஷனுக்கும் சரியா போகிறது. மீத செலவுகளை சரி கட்டத் தான் டாஸ்மாக்கில் மக்களை குடிக்க வைத்து வருமானம் பார்ப்பது, தொடர்ந்து வரிகளை உயர்த்துவது நடக்கிறது. அதிகப்படியான அரசு ஊழியர்களின் சம்பளம் தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் தலையில் பெரும் சுமையாக ஆகிவிட்டது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து அரசு கொடுக்கும் இலவசங்களை குறைத்தால் தான் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.


Bhaskaran
டிச 19, 2024 07:00

இது என்ன நியாயம்


Kasimani Baskaran
டிச 19, 2024 05:50

வேறு ஊருக்கும் போகமாட்டேன். ஆனாலும் பதவி உயர்வும் வேண்டும். செலவினங்கள் மிக குறைவாக உள்ள சிறு ஊர்களில் இருந்து கொண்டு கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டு இன்னும் அதிகமாக வேண்டும் என்பது ஒருவகை பேராசை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை