உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமான வரி பிடித்தத்தில் குளறுபடி; ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வருமான வரி பிடித்தத்தில் குளறுபடி; ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

சிவகங்கை; ''ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் சம்பளத்தில் வருமான வரி பிடிப்பதில் குளறுபடி நீடிக்கிறது'' என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) திட்டத்தில் சம்பளம் உள்ளிட்ட பண பலன்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் சம்பளத்தின் அடிப்படையில் வருமான வரி பிடித்தம் செய்கின்றனர். 2025 பிப்., ல் எஞ்சிய வருமான வரியை பிடித்தம் செய்யும் வகையில் மென்பொருள் தயாரித்துள்ளனர்.இந்நிலையில் 2024 நவ., வரை பிடித்தம் செய்த வருமான வரி தொகை பல ஆசிரியர்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வரி தொகை எட்டிவிட்டது. சிலருக்கு கூடுதலாக பிடித்தம் செய்துள்ளனர். இதனால் கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்ட ஆசிரியர்களின் வரியை தானாக பிடிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சம்பளம் வழங்கும் அதிகாரிகளிடம் முறையிடுகிறோம். ஆனால் அது மென்பொருள் மூலம் பிடித்தம் செய்வதால் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர். கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை 'ரிட்டர்ன்ஸ்' தாக்கல் செய்வதின் மூலமே திரும்ப பெற முடியும்.கடந்த ஆண்டுகள் வரை மாதம் மாதம் சம்பளத்தில் வருமான வரியை பிடித்தம் செய்தது போக, எஞ்சிய தொகையை பிப்., ல் பிடித்தம் செய்தனர். ஆனால், தற்போது செயலி மூலம் கூடுதலாக வருமான வரி பிடித்தம் செய்கின்றனர். எனவே டிச.,ல் ஆசிரியர் சம்பளத்தில் கூடுதலாக வருமான வரி பிடித்தம் செய்ததை நிறுத்த வேண்டும் எனவலியுறுத்திவருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை