உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித்ஷா உறுதி

தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித்ஷா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: '' தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைய உள்ளது உள்ளது. இக்கூட்டணி 39 சதவீத ஓட்டுகளை பெறும்,'' என நெல்லையில் நடந்த பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

துணை ஜனாதிபதி

இம்மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: இந்த புண்ணிய பூமியான தமிழகத்தில், தமிழில் பேச முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த மண் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. வீரம், பண்பாடு, கலாசாரம் மிக்கது. இந்த தமிழ் மண்ணை வணங்கி உரையை துவக்குகிறேன்.நாகாலாந்து கவர்னராக இருந்த இல.கணேசன், பாஜவுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தார். அவரை வணங்குகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7hkv1y86&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடிக்கும், பாஜ தலைவர் நட்டாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை, துணை ஜனாதிபதியாக நிறுத்தப்பட்டு உள்ளார். அடுத்த ராஜ்யசபா கூட்டத்தில் அவர் அவைத்தலைவராக இருப்பார். தேஜ கூட்டணி ஆட்சியின் போதுதான் தமிழகத்தை சேர்ந்த அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

சாதனை

பிரதமர் மோடி, தமிழ் மண், மக்களையும்,மொழி, தமிழர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருக்கிறார். சமீபத்தில் தஞ்சையில், ராஜேந்திர சோழன் நினைவை கொண்டாடும் வகையில், மாபெரும் விழா எடுத்தார். கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்து இன்னொரு வரலாற்றை செய்து காட்டி உள்ளார். காசி தமிழ் சங்கமம் என்ற பெரிய நிகழ்வு ஆண்டாண்டு நடக்கும். சவுராஷ்டிராவுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவை போற்ற சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடக்கிறது. திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் பஹல்காமில் மதத்தின் பெயரால் கொலை செய்த சம்பவம் நடந்தது. அப்போது பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதலை வேரோடு அழிப்போம் என்று உறுதி பூண்டு, பாகிஸ்தானில் வீடு புகுந்து பயங்கரவாதிகளை கொன்று ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் வெற்றி பெற்றுள்ளார். ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்து காட்டினார் மோடி. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆப்பரேஷன் மகாதேவ் மூலம் கொல்லப்பட்டனர்.

ஜெயிலில் இருந்து ஆட்சியா

திருவள்ளுவர், நல்லாட்சி என்பதை விளக்கும் குறளை கூறியுள்ளார். திருக்குறளின் வழி நின்று பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். தகுதி நீக்க மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பிரதமர், முதல்வர் யாராக இருந்தாலும், அவர்கள் சிறை செல்ல நேரிட்டால் அவர்கள் பதவியில் தொடரக்கூடாது. பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் துள்ளிக்குதிக்கிறார்கள். தமிழக அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, பொன்முடி பல மாதங்கள் சிறையில் இருந்துள்ளனர். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்த முடியுமா?

உரிமையில்லை

இந்த மசோதாவை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். இது கருப்பு சட்டம் என சொல்கிறார். இதனை சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை உரிமையில்லை. வருங்காலத்தில் பாஜ அதிமுக கூட்டணியான தேஜ கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான். இவர்கள் ஏராளமான ஊழலை செய்கின்றனர். திமுக அரசின் ஊழல் பட்டியல் நீளும்.டாஸ்மாக், போக்குவரத்து, இலவச வேட்டி சேலை ஊழல் செய்கின்றனர். செம்மண் திருடுகின்றனர். அவர்கள் ஊழலின் உச்சத்தை தொட்டுக் கொண்டு உள்ளனர்.

மக்களை முன்னேற்ற

7980 பூத்களுக்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளீர்கள். கடந்த சட்டசபை தேர்தலில் 18 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்கியிருந்தோம். அதிமுக 21 சதவீத ஓட்டுகள் வாங்கியிருந்தார்கள். இரண்டையும் கூட்டினாலே 39 சதவீத ஓட்டுகளை எளிதாக பெற்று விடுவோம்.தேஜ கூட்டணி அரசியல் கூட்டணி இல்லை. தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்ய மக்களை முன்னேற்றுவதற்கான கூட்டணி. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜ வெற்றி பெறுகிறது என தலைவர்கள் கூறினர். இந்தியா முழுவதும் வெற்றி பெறுவதற்கு பூத்தில் பணியாற்றியவர்கள் தான் காரணம். அடுத்த 8 மாதங்களில் பூத்தில் இருப்பவர்கள் தெருமுனை கூட்டங்கள் போட வேண்டும். வீடு வீடாக செல்ல வேண்டும். மோடியின் திட்டங்களை எடுத்து செல்ல வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளர் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

முடியாது

இண்டி கூட்டணி கனவு காண்கின்றனர். ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்க வேண்டும். சோனியாவின் ஒரே லட்சியம் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். நான் சொல்கிறேன். உதயநிதி முதல்வராக வர முடியாது. ராகுல் பிரதமர் ஆக முடியாது. அந்த இடங்களில் தேஜ வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். டில்லி செங்கோட்டையில் ஜிஎஸ்டி சீரமைப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டு உள்ளது.1 லட்சம் கோடி திட்ட முதலீட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

s.sivarajan
ஆக 22, 2025 22:05

டிரம்ப், புடின் போன்றோர் தமிழக தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வாய்ப்பிருக்கு


Santhakumar Srinivasalu
ஆக 22, 2025 21:42

இப்பவும் கூட்டணி ஆட்சின்னு அமித் ஷா தெளிவா சொல்லீட்டாரு! இதற்கு எடக்கு இபிஎஸ் பதில் என்ன?


திகழ்ஓவியன்
ஆக 22, 2025 21:24

தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி என்று இவர் தான் சொல்லுகிறார் வேறு எவரும் சொல்ல மாட்டேங்கிறான்


தாமரை மலர்கிறது
ஆக 22, 2025 20:52

பிஜேபி தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். என்று அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வந்ததோ, அன்றே அதிமுக பிஜேபியில் கலந்துவிட்டது. அமித் ஷா நியமிப்பவர் தான் அடுத்த முதல்வர். எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அமித் ஷாவின் ஆதரவு கிடைக்கும். ஆந்திராவில் உள்ள பவன் கல்யாண், மகாராஷ்டிரா ஷிண்டே மாதிரி தான் எடப்பாடி. வழிநடத்தி செல்வது அமித் ஷா தான் என்பதை அதிமுக அமைச்சர்களே வாய்மொழியாக ஒத்துக்கொண்டுள்ளார்கள்...


ஜெகதீசன்
ஆக 22, 2025 20:50

39% ஓட்டு போதாதே.... Votes Share: NTK 8% - No Seats TVK 10% - No Seats ADMK 39% - 74 Seats DMK 43% - 160 Seats


pakalavan
ஆக 22, 2025 20:47

நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்


pakalavan
ஆக 22, 2025 20:45

இவருக்கு வேற வேலையேஇல்லை


Raja k
ஆக 22, 2025 20:01

உங்க காமெடிக்கு அளவே இல்லையா அமித்சா அவர்களே,மோடியை தமிழக மக்களுக்கு பிடிக்கும். உங்கள் முழக்கம் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது,


Oviya Vijay
ஆக 22, 2025 19:47

ஒத்த ரூபா பந்தயம் கட்டினாலும் ஒரு கோடி ரூபா பந்தயம் கட்டினாலும் அதுல மாற்றமே இல்லீங்கோ...


vivek
ஆக 22, 2025 20:35

ஓவியரே உம்ம கருத்து ஒத்த ரூபாய்க்கு கூட ஒர்த் இல்லையே அங்கில்


Priyan Vadanad
ஆக 22, 2025 19:33

கலாமின் கனவு காணுங்கள் திட்டத்தை அமிட்ஷா அப்படியே கடை பிடிக்கிறார். அதன் மூலம் பாவக்காவுக்கு சங்கு ஊதுகிறார். இன்னும் கொஞ்சம் சத்தமாக ஊதினால் அப்பத்துக்காக மதம்மாறியவர் போன்றோரின் ஓட்டாவது கிடைக்கும்.


சமீபத்திய செய்தி