உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,

தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கு, தன் சொத்துக்களை பிரித்து தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சமூக வலைதள நிறுவனத்தின் உரிமையாளர் பவெல் துரோவ்.டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், 40, தனக்கு பிறந்த குழந்தைகளுக்கு சொத்துகளை பிரித்து கொடுத்துள்ளார். இது குறித்து பிரெஞ்சு மொழி நாளிதழுக்கு பவெல் துரோவ் அளித்த பேட்டி: எனது குழந்தைகளுக்கு இடையே நான் எந்தவிதமான வித்யாசத்தையும் பார்ப்பதில்லை. இயற்கையான முறையில் கருத்தரித்தவர்கள், எனது விந்தணு தானத்தால் பிறந்தவர்கள் என எல்லோரும் எனக்கு ஒன்றுதான். எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு என நினைக்கிறேன். தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கு, தன் சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளேன். நான் சமீபத்தில் எனது உயிலை எழுதினேன். இன்று முதல் முப்பது ஆண்டுகள் முடியும் வரை என் குழந்தைகள் அந்த சொத்துகளை அணுக முடியாது. அதன் பிறகு சொத்துக்கள் அவரது பெயரில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.மூன்று மனைவிகளுக்கு ஆறு குழந்தைகளின் அதிகாரப்பூர்வ தந்தை தான் துரோவ். மீதமுள்ள குழந்தைகள் இவரது விந்தணு தானத்தில் பிறந்துள்ளது. இவர் சில ஆண்டுகளாக விந்தணு தானம் செய்து வருகிறார். ப்ளூம்பெர்க் கணக்கு படி இவரது சொத்து மதிப்பு 13.9 பில்லியன் டாலர் ஆகும். டெலிகிராம் பயன்பாட்டில் செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்கும் துரோவ் உடந்தையாக இருந்ததாக கூறி பிரெஞ்சு அதிகாரிகளால் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டார். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kalyanaraman Raman
ஜூன் 23, 2025 08:09

Daily I am reading your paper


Mani . V
ஜூன் 23, 2025 06:47

40 வயதில் 100 குழந்தைகளா? அப்படின்னா இந்த ஒரு வேலையைத்தான் செய்து இருப்பானோ?


NAVEE SMARTANS
ஜூன் 22, 2025 14:37

Great


K V Ramadoss
ஜூன் 21, 2025 13:04

எங்கோ உதைக்கிறது ..தானம் செய்தபின் அவரால் எங்கெங்கெல்லாம், யாருக்கெல்லாம் குழந்தைகள் பிறந்தன என்பது , அவருக்கே தெரிவிக்கப்படாத ரகசியமாக அல்லவோ வைத்திருக்க வேண்டும்.


பிரேம்ஜி
ஜூன் 21, 2025 17:17

சரியான கேள்வி! இந்த தானம் பயனாளிகள் விவரங்கள் இவருக்கு தெரிய வாய்ப்பில்லை! ஏதோ தவறான செய்தி!


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 20:10

இவரது மனைவிகள் தங்கள் மனதுக்குள் சிரித்துக் கொள்வார்கள் அவர்களைப் போல நாமும் அப்படி சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.


Lion Drsekar
ஜூன் 21, 2025 12:28

இந்த செய்தி நம் நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று, பாராட்டுக்கள், வந்தே மாதரம்


Ramesh Sargam
ஜூன் 21, 2025 12:11

இவருக்கும் மூன்று மனைவிகள். கலைஞர் கருணாநிதிக்கும் மூன்று மனைவிகள். என்ன ஒரு ஒற்றுமை. கலைஞர் சொத்துக்களை அவர் வாரிசுகள் அனுபவிக்கிறார்கள்.


Pandi Muni
ஜூன் 21, 2025 18:56

நமக்கு தெரிஞ்சி மூனு தெரியாம?...


vee srikanth
ஜூன் 21, 2025 10:34

நவீன திருதராஷ்டிரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை