உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேரத்தை சொல்லுங்கள்… தனி ஆளாக அண்ணாசாலை வருகிறேன்: உதயநிதி சவாலை ஏற்றார் அண்ணாமலை

நேரத்தை சொல்லுங்கள்… தனி ஆளாக அண்ணாசாலை வருகிறேன்: உதயநிதி சவாலை ஏற்றார் அண்ணாமலை

சேலம்: '' அண்ணா சாலையில் எந்த இடம், நேரம், நாள் என்பதை தி.மு.க., முடிவு செய்ய வேண்டும். தனி ஆளாக அங்கு வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தி.மு.க., பா.ஜ., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6yqjvtcq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது; பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை. தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர துப்பில்லை. போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க. இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக சேலத்தில் நிருபர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நாளை காசி தமிழ் சங்கமம், கும்பமேளாவில் பங்கேற்க உள்ளேன். அதற்கு பிறகு கோவைக்கு அமித்ஷா வருகிறார். அடுத்த வாரம் சென்னை வருகிறேன். அண்ணா சாலையில் எங்கு வர வேண்டும் என தி.மு.க.,க்காரன் நேரத்தையும், நாளையும், இடத்தையும் குறிக்கட்டும். அண்ணா சாலையில் எந்த இடம் என்பதை முடிவு பண்ணட்டும். அங்கே வருகிறேன். பா.ஜ., தொண்டர்கள் வர மாட்டார்கள். தனி ஆளாக வருகிறேன். நீ மொத்த படையையும், தி.மு.க., படையையும், போலீஸ் படையையும் வைத்து நிறுத்தி பார். நேற்று நான் சொன்னதில் இருந்து பின் வாங்கப்போவது இல்லை.'கெட் அவுட் மோடி' என்ற வார்த்தையை துணை முதல்வர் உதயநிதி மேடையில் இருந்து பயன்படுத்துகிறார். அவர் வாயில் இருந்து வரட்டும். இன்று சமூக வலைதளத்தில் ஒரு பக்கம் ' கெட் அவுட் மோடி' என ஒரு குரூப். இன்னொரு பக்கம், ' பாலிடாயில் பாபு' என ஒரு குரூப். இரண்டு பேரும் சமூக வலைதளத்தில் கருத்து பரிமாற்றம் செய்கின்றனர்.இன்று முழுவதும் தி.மு.க., ஐ.டி., விங் முக்கி முக்கி இரவு முழுவதும் அமர்ந்து ' கெட் அவுட் மோடி' எவ்வளவு டுவீட் போட முடியுமோ போடுங்க. நாளை காலை 6 மணிக்கு சரியாக என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ' கெட் அவுட் ஸ்டாலின்' என டுவீட் போடுகிறேன். எவ்வளவு டுவீட் போகுதுனு பார்க்கிறேன். மொத்த தி.மு.க., ஐ.டி., விங்கிற்கும் சவால் விடுகிறேன். உனக்கு 24 மணி நேரம் கொடுத்துவிட்டேன். நேற்று ஆரம்பித்து விட்டீர்கள். நாளை வரை நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி ' கெட் அவுட் மோடி' என எவ்வளவு டுவீட் போட முடியுமோ போட்டுக்கோ. நாளை காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். தமிழகத்தில் இருந்து ஸ்டாலின் வெளியே போ.ஆட்சி செய்ய தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. இதனால், ஸ்டாலின் அவர்களே, நீங்களும் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள். நாளை காலையில் 6 மணிக்கு ' கெட் அவுட் ஸ்டாலின் ' என ஆரம்பிக்கிறேன். எவ்வளவு டுவீட் போட்டீர்களோ மொத்தமாக குறிப்பு எடுத்து கணக்கு எடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 6 மணியில் இருந்து பா.ஜ.,வின் காலம். நாங்க எவ்வளவு போடுறோம்னு கணக்கெடுத்து பாருங்க. நீ போடும் டுவிட்டுக்கு பா.ஜ., தொண்டர்கள்ல, மக்கள் போடும் டுவீட்டுக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்குனு நாளை மறுநாள் காலையில் பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருகிறேன். இன்று ஒரு நாள் தி.மு.க.,வுக்கு கொடுத்தாச்சு. எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்க. நாளைக்கு எங்களின் நாள். காலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறேன். கெட் அவுட் ஸ்டாலின். முழு இந்தியாவையும் சேர்ந்து எங்களை விட அதிக டுவீட் போட்டு காண்பிக்க வேண்டும். சவால் விடுகிறேன். எங்களின் அரசியல் இப்படி தான் இருக்கும். 26ம் தேதி தமிழகத்தில் இருக்கிறேன். நேரம் இடத்தை அண்ணாசாலையில் இங்கு வந்து காட்டுனு சொல்லு. வர முடியாதா… தனி ஆளாக வருகிறேன். தடுத்து நிறுத்து. உதயநிதிக்கு அவரது பாணியில் தான் பதில். மரியாதை கொடுத்தால் மரியாதை இருக்கும். மரியாதை இல்லை என்றால் என்னுடைய வாயில் இருந்து உதயநிதி தொடர்பான வார்த்தையில் மரியாதை இருக்காது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

Karthik
பிப் 21, 2025 14:17

சீக்கிரம் இந்த மொழி பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்கப்பா..


Mani . V
பிப் 21, 2025 03:42

மிஸ்டர் அண்ணாமலை உங்களுக்கு தா.கி., ஆலடி அருணா, மதுரை தினகரன் அலுவலகம் இதெல்லாம் தெரியாதா? அல்லது திமுக வின் உண்மை முகம் தெரியாதா? தனியா போய் மாட்டிக்காதீங்க. செஞ்சுறுவாங்க.


kamal 00
பிப் 21, 2025 09:47

கவலை வேண்டாம்.... இறைவனும் இயற்கையும் நாங்களும் இருக்கும் வரை அண்ணாமலைக்கு ஜெயம் தான்


vijai hindu
பிப் 21, 2025 11:18

சிங்கப்பூரில் இருந்து சவுண்டு என்ன தெரியும் அண்ணாமலை பத்தி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 20, 2025 23:23

அறிவும் ஆன்மையும் நிறைந்த ஆண்மகன் எங்கள் அண்ணாமலை..... கர்நாடகத்திலே சமூக விரோதிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டி கர்நாடக சிங்கம் என்று பேர் வாங்கினவர்..... குள்ளநரி ஊளைக்கு கும்மி எடுத்துறுவாரு....


kantharvan
பிப் 21, 2025 10:06

அடப்பாவிகளா ??


Ramesh Sargam
பிப் 20, 2025 23:22

வாய் கொடுத்து மாட்டிக்கொண்டான் அந்த சின்னப்பையன் உதயநிதி.


Bhakt
பிப் 20, 2025 23:06

மறுக்கா பால்டா ஆயிலிங் குடிச்சிட போறாரு எங்கள் சின்னது


T.sthivinayagam
பிப் 20, 2025 22:22

உங்கள் வீரமான பேச்சை மாணவர்களின் கல்வியை பறிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு மீது காட்டுங்கள் மக்கள் உங்களை மதிப்பார்கள்


Venkatesan Srinivasan
பிப் 21, 2025 10:39

உளர வேண்டாம். மத்திய அரசு பிள்ளைகளை மேலும் மேலும் படிக்க தான் ஊக்கம் கொடுக்கிறது. இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் தான் கல்வியின் தரத்தை குறைக்க முயல்கிறார்கள். அரசாங்க பள்ளிகளின் கல்வி தரம் வளரவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.


பேசும் தமிழன்
பிப் 21, 2025 12:59

மத்திய அரசு மாணவர்களின் கல்வியை பறிக்க நினைக்கவில்லை.... மாறாக கூடுதலாக இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்கலாம் என்று... கூடுதல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுகின்றனர்.


Priyan Vadanad
பிப் 20, 2025 21:37

ஒரு கம்பெனியின் சின்ன முதலாளி கொஞ்சம் ஏறுக்குமாறா நடந்துக்கிறார்னா, அடுத்த கம்பெனி லோக்கல் முதலாளி நானும் அப்படித்தான்னு நடந்துக்கிட்டா எப்படி?


krishna
பிப் 20, 2025 22:21

SARI EERA VENGAAYAM NOTED YOUR MUTTU.


Priyan Vadanad
பிப் 20, 2025 21:32

ரெண்டு வைத்தியங்க ஒண்ண ஒண்ணு கல்லால் அடித்து கொள்வது பாக்குறதுக்கு ரொம்ப டமாஷா இருக்குது.


Nagendran,Erode
பிப் 21, 2025 03:42

ஏலே அப்பத்துக்கு மதமாறிய பாவாடை உதயநிதியை மட்டும் சொல்லு ஏன் அண்ணாமலையை இதில் இழுக்கிறாய். மதம் மாறினாலே தேச விரோதம் தன்னாலே வந்து விடும் போல...


Laddoo
பிப் 21, 2025 06:07

200 ரூவா உபி, அண்ணாமலை ஓர் அதிரடி நாயகன். குள்ள நரியல்ல. சிங்கம் சிங்கிலா தான் வரும்.


kamal 00
பிப் 21, 2025 09:56

கண்டிப்பா உனக்கு முத்தி போச்சு.... ஞானசேகர் கிட்ட சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்


தமிழ் நாட்டு அறிவாளி
பிப் 20, 2025 21:31

அரசியல் தலைவர்கள் எல்லாம் சீமான் மாதிரி கெளம்பீட்டங்க. எமோஷன் முக்கியம் தம்பிகளே. சவாலுக்கு சவால் எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சிறுபுள்ளைத்தனமா வீதில உக்காந்து கூட்டத்திலே மண்ணை அள்ளி போட்டு விளையாடுதுக


kamal 00
பிப் 21, 2025 09:58

இன்னிக்கு சோறு கிடைச்சா போதும் ங்கிற கும்பல் நீங்க...... உங்க சந்ததி பத்தி கொஞ்சம் யோசிங்க.... அதுல சிதறு தேங்காய் கிடைக்கும் னு பார்க்காதீங்க


Priyan Vadanad
பிப் 20, 2025 21:30

சீமான் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்: ரெண்டு வைத்தியங்களுக்கிடையில கொஞ்சம்பேரு சிக்கி சின்னாபின்னாகி போறானுங்க.


சமீபத்திய செய்தி