உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை 3 டிகிரி உயர வாய்ப்பு

தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை 3 டிகிரி உயர வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இன்றும், நாளையும், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும், 22ம் தேதி வரை வறண்ட வானிலை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 17, 2025 12:39

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பெங்களூரு அந்த அளவுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இப்பொழுது மீண்டும் வெப்பநிலை அதிகம். அதிக வெயில், சூடு தாங்கமுடியவில்லை. பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்டமுடியாத அளவுக்கு உஷ்ணம். ஸ்ஸ்... ஜில்லுனு ஒரு ஜூஸ் கொடுப்பா.