உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வெயில் 4 டிகிரி அதிகரிக்கும்

 வெயில் 4 டிகிரி அதிகரிக்கும்

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், இன்று வெயிலின் தாக்கம், 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்றும், நாளையும், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், இன்று வெயிலின் தாக்கம், இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். மார்ச், 29, 30 தேதிகளில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !