உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலுக்கு வந்தது முதல் டென்ஷன்: முதல்வர் ஸ்டாலின்

அரசியலுக்கு வந்தது முதல் டென்ஷன்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' 14 வயதில் அரசியலுக்கு வந்தேன். அப்போது முதல் எனக்கு டென்ஷன் தான். அது பழகிவிட்டது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கிரிக்கெட்

விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: நான் விளையாடிய முதல் விளையாட்டு ஹாக்கிதான். கிரிக்கெட்டில் கபில்தேவ், சச்சின், தோனியை பிடிக்கும். நாம் இப்போது வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன். பள்ளியில் படிக்கும் போது தெருவில் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். கருணாநிதி கிரிக்கெட் விளையாடி உள்ளார். அவருக்கு பந்து வீசி உள்ளேன். ஆப் ஸ்பின் வீசுவேன். பள்ளியில் படிக்கும் போது புக் கிரிக்கெட் விளையாடுவோம். இதெல்லாம் ஞாபகம் வருகிறது.சினிமா நட்சத்திரங்களுடன் நடந்த கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அப்போது 3 விக்கெட் வீழ்த்தி உள்ளேன். அப்போது, சிம்பு, நெப்போலியன் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி உள்ளேன்

தோனி பிடிக்கும்

தோனியின் கேப்டன்ஷிப் பிடிக்கும். அவரது ஸ்டைல், ஸ்மைல், ஸ்வீட்டாக கேப்டன்ஷிப் செய்வார். இவ்ளவவு வயதை கடந்தாலும் தோனி விளையாட வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். தோனியை என்னுடன் ஒப்பிட முடியாது. தோனி பெரிய வழிகாட்டியாக உள்ளார்.வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஹாக்கி விளையாடுகின்றனர். இது தொடரும். விளையாட்டு துறையில் முன்னேறி கொண்டு இருக்கிறோம். உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார். 14 வயதில் அரசியலுக்கு வந்தேன். அப்போது முதல் 'டென்ஷன்' தான். இது பழகிவிட்டது. அதனை கடந்து சென்றுவிடுவேன். அழுத்தம் இருந்தால் புத்தகம் படிப்பேன். டிவி பார்ப்பேன். பாட்டு கேட்பேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

காவி
டிச 25, 2025 07:35

ஆமாம் இந்த ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு டென்ஷன் தான்


HoneyBee
டிச 24, 2025 21:43

நீங்க வந்துது முதல் மக்களுக்கு தான் டென்ஷன். சீக்கிரம் கடையை கட்டிட்டு போங்க


sankaranarayanan
டிச 24, 2025 21:35

14 வயதில் அரசியலுக்கு வந்தேன் என்று கூறிக்கொண்டே தமிழ் நாட்டை குட்டி சுவராக்கி விட்டாய் இனி மீண்டு எழுவதற்கு பல ஆண்டுகள் தேவை புரிந்துகொண்டால் சரி


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 24, 2025 21:09

14 வயசுலேயே டென்ஷன் வந்தும் இன்னும் ஒரு வெள்ளை முடி இல்லையே. சூப்பர் அப்பா நீங்க


Veluvenkatesh
டிச 24, 2025 20:56

ஐயா ப்ளீஸ்..நோ டென்ஷன், ஜஸ்ட் கெட் vrs. இது உங்களுக்கும், சொன்ன பொய்யை நம்பி ஏமாந்து வாக்களித்த இந்த பாவப்பட்ட டாஸ்மாக் நாட்டின் மக்களுக்கும் ரொம்ப அவசியம். ஆக, உங்களுக்கு வேண்டியது பழைய ஓய்வு ஊதிய திட்டமா? அல்லது புதிய ஓய்வு ஊதிய திட்டமா?


ManiK
டிச 24, 2025 20:06

ஆமா நம்பில்கு கபில்தேவ் புடிக்கும்... ஜப்பான்ல ஜாக்கிசான் புடிக்கும், துபாய்ல ரமஜான் புடிக்கும்...சாரி இப்போ கிரிட்மஸ் புடிக்கும்...


சந்திரன்
டிச 24, 2025 20:05

14 வயதில் அரசியலுக்கு வந்தேன்.


V K
டிச 24, 2025 19:54

அய்யா டென்ஷனாக இருக்கும் பொழுது பெரியாரின் மரண சாசனம் என்ற நூலில் பக்கம் 21 படிக்கவும் டென்ஷன் எல்லாம் போய்விடும்


S.L.Narasimman
டிச 24, 2025 19:51

அமைதியுடன் வாழ்ந்து இருக்கலாம்.


Anantharaman Srinivasan
டிச 24, 2025 19:49

அரசியலுக்கு வந்தது முதல் டென்ஷன் தான். வேண்டாம் பதவியை துறங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை