உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்: கூலித்தொழிலாளி கண்ணீர்

கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்: கூலித்தொழிலாளி கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: கூலித்தொழிலாளி ஒருவர் மண்ணில் புதைத்து வைத்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் கரையான் அரித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி கிராமத்தில் முத்து கருப்பி (30). கூலி தொழிலாளி. ஏழ்மையில் வாடும் அவர் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைக்க திட்டமிட்ட அவர், இதற்காக தகர உண்டியல் ஒன்றை தயார் செய்துள்ளார்.தினமும் சம்பள பணத்தை ரூ.500 ஆக மாற்றி, அந்த உண்டியலில் போட்டு வீட்டிற்கு உள்ளேயே பள்ளம் தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார். அந்த வகையில் அவர் ரூ.1 லட்சம் வரை அவர், தகர உண்டியலில் சேர்த்து வைத்து உள்ளார். மகளுக்கு காதணி விழா நடத்த இன்று காலை உண்டியலை திறந்து பார்த்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. சிறுக சிறுக ஒரு வருடத்திற்கு மேலாக சேமித்த பணத்தை கரையான் அரித்துள்ளது. சேமிப்பு பணம் முழுதும் வீணாகிவிட்டதால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் கண்ணீர் வடிக்கும் முத்து கருப்பி, தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

KV WOODENPLUG
மே 07, 2025 06:58

வறுமை கோடு அழியாத தமிழ்நாடு


tamilvanan
மே 07, 2025 02:57

கரையான் அரித்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றலாம். அந்த வங்கியையும் அணுகி நோட்டுகளை தரவும். நம்பர் சரியாக இருந்தால் வங்கியே மாற்றும், நம்பர் சரியாக தெரியாத நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றி தரும்.


தாமரை மலர்கிறது
மே 06, 2025 21:26

இந்த பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 06, 2025 20:41

படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில் படிப்பறிவில்லாத தொழிலாளி? இவர் மட்டும் எப்படி படிக்காமல் போனார்? அரசு என்ன செய்கிறது? இவரின் கணவர் படித்தவரா? குழந்தைகளாவது படிக்கின்றனரா? அன்பில் மகேசு... அங்கே என்ன பண்றீங்க? இங்கேயும் கொஞ்சம் கவனியுங்க.


அப்பாவி
மே 06, 2025 20:10

இதுமாதிரி நோட்டுகளை வங்கியில் குடுத்து மாத்திக்கலாமே...


Ramesh Sargam
மே 06, 2025 20:08

அந்தப்பெண் செய்தது மிகப்பெரிய தவறுதான். என்ன செய்வது, படிப்பறிவில்லாதவர், தவறு செய்துவிட்டார் . நல்ல உள்ளம் படைத்தவர்கள் அல்லது நல்ல உள்ளம் படைத்த வங்கி ஊழியர்கள் அந்த ஏழைப்பெண்ணுக்கு உதவி செய்யவேண்டும்.


Rathnam Mm
மே 06, 2025 19:54

The District Collector must come forward to help the very poor family and repay the amount from RBI


Sivaraman V
மே 06, 2025 19:54

உடனடியாக வங்கிகள் கரையான் அரித்த பணத்தை மாற்றி தர உதவவேண்டும்


Sarashan
மே 06, 2025 19:54

ரூபாய் நோட்டுக்களின் எண்கள் அழியாமல் இருந்தால், RBI மாற்றலாம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். முயற்சி செய்யலாமே


Raja k
மே 06, 2025 19:52

திராவிட மாடல் ஆட்சியில் பணம் சேமிக்க கூட உண்டியல் தரபடவில்லை, விரைவில் திராவிடம் இல்லாத அதிமுக, பாஜ மலர்ந்ததும், சேமிக்கும் பணம் கரையான் அரிக்காதவாறு வழிவகை செய்யபடும்


சமீபத்திய செய்தி