உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்: கர்நாடகா - சித்ரதுர்கா அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.கர்நாடகா - சித்ரதுர்கா அருகே சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அர்ஜூன் (28), சரவணா (31), செந்தில் (29) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காரை டிரைவர் அதிவேகமாக இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
மே 02, 2025 05:05

காவலர்கள் என்பதால் புகைப்படங்கள் இல்லையா..


அப்பாவி
மே 01, 2025 16:42

கதிசக்தி போடோ போடுன்னு போடுது... ஆழ்ந்த இரங்கல்கள். இதே இடத்தில்தான் போன மாசம் விபத்து நடந்திச்சு.


Kasimani Baskaran
மே 01, 2025 14:27

அலை பேசியை உபயோகப்படுத்திக்கொண்டு ஒட்டியிருக்க வாய்ப்பு அதிகம்.. இல்லை என்றால் சாலை தடுப்பு மீது மோதவேண்டிய அவசியமே இல்லை.


sundarsvpr
மே 01, 2025 13:05

கார் ஓட்டுனர்கள் குடித்து இருந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை தடுக்க ஒரு வழிமுறை நிர்ணயம் செய்திடல் அவசியம். முதலில் குடும்ப உறுப்பினர் போட்டோ இருக்கவேண்டும்.


முக்கிய வீடியோ