உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் அத்வானியை கொல்ல முயன்றோம்; பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்

மதுரையில் அத்வானியை கொல்ல முயன்றோம்; பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்

சென்னை: மதுரையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை, வெடிகுண்டு வைத்து கொலை செய்வதற்கான சதி திட்டங்களை தீட்டியதாக, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்கு மூலம் அளித்துள்ளார். கோவை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில், கடந்த ஜூலை 1ம் தேதி கைது செய்யப்பட்டார். 7 நாள் காவல் மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்ய முயன்றது தொடர்பாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இவரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அபுபக்கர் சித்திக் அளித்துள்ள வாக்குமூலம்:

கடந்த, 2011, அக்டோபர் மாதத்தில், அத்வானி ரத யாத்திரை பயணம் மேற்கொள் கிறார் என்ற தகவல் கிடைத்தது. அந்த மாதத்தில், 28ம் தேதி, மதுரை திருமங்கலம் வழியாக, அத்வானியின் ரத யாத்திரை, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்துார் செல்வதாகவும் கூறப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் ராஜபாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பின், மதிய உணவுக்கு திருநெல்வேலி மாவட்டம், தரணி சர்க்கரை ஆலையின் விருந்தினர் இல்லத்திற்கு அத்வானி செல்கிறார் என்ற, தகவலும் எனக்கு வந்து சேர்ந்தது. இந்த முறை அத்வானியை எப்படியாவது கொன்று விட வேண்டும் என, திட்டம் தீட்டினோம். அதற்கான பணிகளை, நான் தான் முன்னின்று செய்தேன்.

நானே தயாரித்தேன்

இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த என் கூட்டாளிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் அண்ணன் தர்வீஸ் மைதீன், மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, சகாபுதீன் என, 10 பேரை சந்தித்தேன். அவர்களுடன் ரகசிய கூட்டம் நடத்தினேன். அத்வானியை கொல்ல, இது தான் சரியான சந்தர்ப்பம். இதை நழுவ விடக் கூடாது என, முடிவுக்கு வந்தோம். அத்வானி ரத யாத்திரை, மதுரை திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி தரைப்பாலத்தை கடந்து செல்ல இருந்தது. இதனால், 'பைப்' வெடிகுண்டு தயாரித்து, அந்த பாலத்திற்கு கீழே வைத்துவிட்டு தப்பித்து விட்டோம். அந்த வெடிகுண்டை நான் தான் தயாரித்தேன். போலீசார் எங்கள் சதி திட்டத்தை முறியடித்து, 'பைப்' வெடிகுண்டை செயலிழக்கச் செய்து விட்டனர். அதன் பின்னரும், அத்வானியை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்; ஆனால், நிறைவேறவில்லை. இதனால், பா.ஜ., பிரமுகர்கள் மற்றும் ஹிந்து தலைவர்களை குறிவைத்து கொலை செய்து வந்தோம். இந்த வழக்குகளில், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட, 10 பேரும் கைதாகினர். நான் மட்டும் தப்பிச் சென்று விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பாரதி
ஆக 26, 2025 15:33

கொள்ளையடிக்க வந்தவர்கள் எழுதிய சட்டங்கள் என்ன செய்யும் கொள்ளையடிப்பவர்களை பாதுகாக்கும் ஏமாளி மக்களை ஏமாற்றும்


சிந்தனை
ஆக 26, 2025 15:32

தேசவிரோதிகள் மக்களை கொன்ற பிறகு ஆடம்பர பேச்சு பேசத்தான் நீதிமன்றத்திற்கு வரி கட்டுகிறோம் வருமுன் தடுப்பதற்கு அல்ல வருமுன் தடுப்பவர்களை சிறையில் போடுவதற்கும்


பாரதி
ஆக 26, 2025 15:30

இவன் முஸ்லிமா திராவிடனா என்பதை விளக்க வேண்டும் நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் சம்பளம் கொடுக்க வரிகட்டி நாம் ஏழைகளாக ஆகி நொந்து போனதுதான் மிச்சம் அவர்கள் வயிறு வளர்க்க நல்லா இருப்பார்களா பாவிகள்


surya krishna
ஆக 26, 2025 09:16

கொலைகார பசங்க இவர்களிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும்


ரங்ஸ்
ஆக 26, 2025 09:11

தேச விரோதிகளை வேரோடு அழிக்க வேண்டும். தாமதம் செய்தால் நாட்டுக்கு ஆபத்து.


karthik
ஆக 26, 2025 08:37

இவனைப்போல இவர்கள் சமூகத்தில் எத்தனை ஆயிரம் பேர் நல்லவர்கள் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வாழ்கிறார்களோ? நமது அரசியல்வியாதிகள் வெட்கமில்லாமல் ரஸ் மீது வன்மத்தை பரப்பி ஓட்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்


D Natarajan
ஆக 26, 2025 08:31

எனகொண்டெரில் போட்டு தள்ள வேண்டும். கோர்ட்டுக்கு போனால் , மாண்புமிகு நீதிபதிகள் விடுதலை செய்துவிடுவார்கள்


V RAMASWAMY
ஆக 26, 2025 08:26

எவ்வளவு மெத்தனம் இந்த நிகழ்வில், 30 ஆண்டுகளாகியும் நடவடிக்கைகளில் சொதப்பல்.


VENKATASUBRAMANIAN
ஆக 26, 2025 07:59

இவனுக்கு ஆதரவு தந்த நாதாரிகளையும் பிடித்து உள்ளே போடவேண்டும். இவனை சுட்டு தள்ள வேண்டும். அப்போதுதான் இவனைப்போன்றவர்களுக்கும் ஆதரவு கூடுதல் அளிப்பவர்களுக்கும் பயம் வரும்.


karupanasamy
ஆக 26, 2025 07:52

மனிதனை கொலைவெறி மிருகமாகமாற்றும் அந்த எழவு புத்தகம் இவ்வளவு மோசமானதா? இசுலாத்தை துறந்து மனிதனாய் மாறுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை