உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இந்தியா - பாக்., போராக மாறக்கூடாது: எச்சரிக்கிறார் திருமாவளவன்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இந்தியா - பாக்., போராக மாறக்கூடாது: எச்சரிக்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: “பயங்கரவாத தாக்குதலுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை,” என்று திருமாவளவன் தெரிவித்தார்.திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த வி.சி., கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி.,யுமான திருமாவளவன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஆதங்க வெளிப்பாடு

அதில், எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. அவரை பதவி விலகக் கேட்பது ஆதங்கத்தின் வெளிப்பாடு; அவ்வளவுதான்.அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்று இருந்த 370வது சட்டப்பிரிவை நீக்கினால், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகள் இருக்காது என, பா.ஜ., தரப்பில் திரும்பத் திரும்பக் கூறினர். சொன்னபடியே, அதை நீக்கவும் செய்தனர்.அதையடுத்து, காஷ்மீருக்கு யாரும் தைரியமாக சுற்றுலா செல்லலாம் எனவும் ஊக்கப்படுத்தினர். அதை நம்பித்தான், பலரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். ஆனால், பாதுகாப்பு அளிக்க வேண்டிய மத்திய அரசு, இந்த விஷயத்தில் சோடை போய்விட்டது.ஏற்கனவே நடந்த மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று, அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார்.தற்போது, பா.ஜ.,வின் மூத்த தலைவராக இருக்கும் சுப்பிரமணியன் சாமி, காஷ்மீர் பிரச்னையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த அடிப்படையில் தான், வி.சி.,க்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாக்., என மோதல் உருவாகி, இருதரப்புக்கும் இடையே போராக மாறி விடக்கூடாது.உலக நாடுகள் மத்தியில் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் செயல்பாட்டை அம்பலப்படுத்த வேண்டும்.

ஒடுக்கவில்லை

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது, இங்கிருக்கும் மக்களுக்கு எதிரானது அல்ல; மோடி அரசின் செயல்பாடுகளுக்கு எதிரானது.மத்திய அரசின் செயல்பாடு, பயங்கரவாதத்தை ஒடுக்கவில்லை; தீவிரப்படுத்துவதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 173 )

xyzabc
மே 21, 2025 10:56

சிதம்பரம் மக்கள் செஞ்ச தப்பு.


M Ramachandran
மே 20, 2025 22:00

திரு மாவுக்கு ஸ்டாலின் வீட்டில் சப்பாத்திமாவு பிசையும் வேலை இருக்கே.அங்கு உட்கார ஸ்டூலும் கொடுப்பார்கள்.


Narayanan
மே 19, 2025 12:26

ஏன் திருமா? காஷ்மீர் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு இடத்தில் நிலம் வாங்கிவிட்டாரா அல்லது பாகிஸ்தானிலேயே இடத்தை பிடித்து விட்டாரா? கட்ட பஞ்சாயத்தில் இடங்களை கொள்ளை அடிப்பதில் இவரின் கட்சி படு கில்லாடி. அதனால்தான் பதறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார். முதலில் இந்தியா எங்கள் நாடு, நாங்கள் இந்தியர்கள் என்று பேசப்பழகுங்கள். இந்தியர்கள் யாருக்கும் பாகிஸ்தானை, அவர்களின் நாட்டை பிடிக்க ஆசை இல்லை. ஆனால் நம் நாட்டை அழிக்க பயங்கரவாதிகளுடன் கைக்கோர்த்து நிற்கிறார்கள். பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் அரசு கலந்துகொள்கிறது என்றால் சிந்தியுங்கள். உமக்கு சிந்திக்கும் திறன் அற்றுப்போய்விட்டது.


Raghavan
மே 13, 2025 18:36

இங்கே வேங்கைவாசல் கதையே நாறுது இதில் இவர் ஆதங்கப்படுகிறார் . ஏதோ ஒரு MP MLA பதவி கிடைத்ததா தேர்தலுக்கு தேர்தல் பொட்டி கிடைத்ததா என்று சும்மா இருப்பதை விட்டுவிட்டு பினாத்திக்கொண்டு இருக்கக்கூடாது.


Parthasarathy Badrinarayanan
மே 12, 2025 07:41

தேசத்துரோகி....


sethusubramaniam
மே 11, 2025 21:46

அப்படியே போர் நடந்தாலும், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் , கிறிஸ்தவர் போன்ற மதத்தவர் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஒரு பாகிஸ்தான் இஸ்லாமியர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதை மோடியும் அமித்ஷாவும் உறுதி செய்யவேண்டும் . இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்ன்னும் தெளிவா சொல்லியிருக்கலாமே திருமா .


sethusubramaniam
மே 10, 2025 23:24

தொல். திருமாவின் எச்சரிக்கைக்கு பணிந்து , போரை நிறுத்திய மோடியை பாராட்டுவோம்.


SRITHAR MADHAVAN
மே 10, 2025 11:04

அரசியல் பிச்சைக்காரன்.,


SRITHAR MADHAVAN
மே 10, 2025 10:56

நமது பாதுகாப்பு ஜெனரல் நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு ஆலோசனை கூறுகிறார். மோடிஜி, தயவுசெய்து கவனமாக இருங்கள்.


RAJ
மே 09, 2025 19:01

இவரை ... தெருவுல ஓடவிட்டு விடுங்க...


சமீபத்திய செய்தி