உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறை அதிகாரிகளை கொன்ற பயங்கரவாதியிடம் விசாரணை

சிறை அதிகாரிகளை கொன்ற பயங்கரவாதியிடம் விசாரணை

சென்னை:கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தி, 58 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, பயங்கரவாதி டெய்லர் ராஜாவை, ஐந்து நாள் காவலில் எடுத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை, தெற்கு உக்கடம், பிலால் காலனியை சேர்ந்தவர் சாதிக் அலி என்ற டெய்லர் ராஜா, 48. இவர், கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில், 29 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். கடந்த, 9 ம் தேதி, கர்நாடக மாநிலத்தில், தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி., மகேஷ் மற்றும் மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஐந்து நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கோவை குண்டு வெடிப்பு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில், டெய்லர் ராஜா தேடப்பட்டு வந்தார். கடந்த 1999ம் ஆண்டு, தமிழகம் மற்றும் கேரளாவில், ஏழு இடங்களில் வெடிகுண்டு வைத்ததில், டெய்லர் ராஜா முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். ஆந்திராவில் கைதான பயங்கரவாதிகள், அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோருடன், தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. மேலும், மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயபிரகாஷ், கோவையில் ஜெயிலர் பூபாலன் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாகவும் இவரிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shakti
ஜூலை 31, 2025 16:57

பயங்கவாதிக்கு என்ன அவர் இவர்னு மரியாதையை வேண்டி கிடக்கு ???


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 31, 2025 09:14

கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில், 29 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை ஏன் அவசரப்பட்டு கைது செய்கிறீர்கள்.. இன்னும் ஒரு 20 ஆண்டுகளில் அவனே இயற்கையாக மரணம் அடைத்து விடுவான். இப்போது அவனை சிறையில் அடைத்து பத்திரமாக பாதுகாப்பு தாருங்கள். அவனும் கோர்ட்டில் வாய்தா வாங்கி வாய்தா வாங்கி இன்னும் இருபது வருஷத்தை அரசாங்க செலவில் ராஜா உபச்சாரத்தில் கழித்துவிடுவான். எங்காவது அப்பாவி கோவில் வாட்ச்மேன் கிடைத்தால் கம்பியால் அடித்து சொர்க்கத்துக்கு அனுப்புங்கள் ..


Kalyanaraman
ஜூலை 31, 2025 08:42

இன்றைய தமிழ்நாடு காவல்துறை முஸ்லிம் குற்றவாளிகளை காப்பதற்காகவே பாடுபடும். இவனைப் பிடித்ததில் மற்ற மாநில காவலர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் உடனடியாக தப்ப வைக்க முடியவில்லை. இல்லையேல் மற்றொரு சிலிண்டர் வெடிப்பு என்று மூடி மறைத்து இருப்பார்கள். இதை என.ஐ.ஏ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் மேலும் இந்த நெட்வொர்க் பற்றி முழுமையாக தெரியவரும்.


D Natarajan
ஜூலை 31, 2025 08:24

நிச்சயமாக தண்டனை கிடையாது, பிரியாணி கிடைக்கும். வோட்டு அரசியல். சுட்டு கொன்றிருக்க வேண்டும். இரக்கமற்ற மிருகங்கள்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 31, 2025 06:15

இந்த அலி தப்பித்து இவ்ளோ நாள் வாழ உதவி செய்த எல்லா பன்றிகளுக்கும் இலவசத்தை வாரி மக்கள் காசில் வழங்கிடுங்க துண்டு சீட்டு


புதிய வீடியோ